ஒரே முறை டெபாசிட் செய்தால் 4,50,000 வட்டி! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

Published : Nov 02, 2024, 07:43 AM ISTUpdated : Nov 02, 2024, 08:12 AM IST

தபால் அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கான பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளர்களும் தபால் அலுவலக திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியை ஈட்டலாம்.

PREV
17
ஒரே முறை டெபாசிட் செய்தால் 4,50,000 வட்டி! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!
Post Office Time Deposit Interest rate

முதலீட்டாளர்கள் தபால் துறையின் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 5 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டம் அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.

27
Post Office Schemes

பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோர் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியைப் பெற முடியும்.

37
Post Office Time Deposit

நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் துறையின் பல திட்டங்கள் மூலம் ஏழை முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவரும் பயனடைகின்றன. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்பது அத்தகைய சிறு சேமிப்பு திட்டமாகும்.

47
Post Office Savings Schemes

எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டாளர்கள் 7.50% வட்டியைப் பெறுலாம். இதில் முதலீடு செய்வதற்கு பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெறலாம்.

57
Post Office Schemes for 5 years

அரசுத் திட்டமான போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டில், முழுப் பணத்தையும் ஒரே முறை டெபாசிட் செய்ய வேண்டும். அதில் அவ்வப்போது வட்டி சேர்ந்து பணம் கூடிக்கொண்டே இருக்கும்.

67
Post Office Joint Account

இந்தத் திட்டத்தில் 3 பேர் வரை கூட்டாகவும் முதலீடு செய்யலாம். தனிநபர் கணக்கும் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதலீட்டு செய்ய வேண்டும். அதற்கு மேல் ரூ.100 இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

77
Post office Time Deposit 2024

தினமும் ரூ.2,778 சேமித்து, ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தை ஒரே முறை முதலீடு செய்தால், வட்டியில் மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.4,49,948 சம்பாதிக்கலாம். ஐந்து ஆண்டுகள் கழித்து முதிர்வுத் தொகையாக ரூ.14,49,948 கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories