கம்மி வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் தரும் தமிழக அரசு: விண்ணப்பித்துவிட்டீர்களா?

Published : Nov 02, 2024, 06:35 AM IST

கலைஞர் கடன் உதவி திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன் அடைய தமிழக அரசு அழைப்பு.

PREV
15
கம்மி வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் தரும் தமிழக அரசு: விண்ணப்பித்துவிட்டீர்களா?
Mk Stalin

நாட்டில் தொழில் துறையை முன்னேற்றும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி தொழில் முனைவோருக்கு உதவிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோருக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினை நிதி சுமை தான். நிதி சுமையை தாங்க முடியாமலே பல சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன.

25
MK Stalin nirmala sitharaman

இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு அட்டகாசமான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும்.

35
Mk Stalin

கடனை எங்கு பெறலாம்?

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. 

45
Loan Scheme

கடனை பெறுவது எப்படி?

சிறு, குறு, உற்பத்தி நிறுவனங்கள் 7 சதவீத வட்டி விகிதத்தில் இத்திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் அசையா சொத்துகளை அடமானமாக வைக்க வேண்டும். 

55
Tamil nadu government

தகுதி

கடன் பெறும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தொழில் முனைவோர்கள் 600 புள்ளிகள் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவான சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் கடன் பெறும் நிறுவனங்கள் முந்தைய 2 நிதி ஆண்டுகள் லாபத்தில் செயல்பட்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories