விற்பனையில் மந்தம்; அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

First Published Nov 1, 2024, 12:09 PM IST

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

எவ்வளவு தான் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் பெண்களுக்கு எப்பொழுதும் குறைந்ததாக இல்லை. குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீது காதல் அதிகம் தான். அதனால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 

மேலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால் அவர்களின் பிரதான தேர்வாக இருப்பது தங்கம் மற்றும் நிலம் தான். அதிலும் நிலத்தில் பெரிய தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் தங்கத்தின் மீது சிறிய தொகையைக் கூட முதலீடு செய்ய முடியும். இதனால் பெரும்பாலான நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை தவனை முறையில் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். 

Latest Videos


குறிப்பாக அடுத்து வரும் 2, 3 மாதங்களுக்கு இந்தியாவில் பண்டிகைகள் வரிசையாக வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தங்கம் அடுத்த ஓரிரு வருடத்தில் சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து விலை ஏற்றம் கண்டாலும் தங்கத்தை வாங்குவதை மக்கள் குறைத்ததாக இல்லை.

இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

click me!