LPG Cylinder Price Hike
LPG Cylinder Price Hike: சர்வதேச சந்தையினல் விற்பனையாகும் கச்சா எண்ணெய்யின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரேல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும், கேஸ் சிலிண்டர்கள் மாதம் ஒரு முறையும் என்ற அடிப்படையில் விலை மாற்றப்பட்டு வருகிறது.
LPG Cylinder Price Hike
அதாவது கேஸ் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் வீடுகளுக்கு பயன்படுத்த 14.2Kg எடையிலும், விணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு 19Kg எடையிலும் என இரு வடிவங்களில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
LPG Cylinder Price Hike
இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.5 உயர்ந்து ரூ.1964.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் விற்பனை செய்யப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு சிலிண்டர் ரூ.818.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.