Post Office Scheme: போஸ்ட் ஆபிஸின் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.17,000 நிலையான வருமானம் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல், பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். சிறுவர்கள் முதல் மூத்த குடிமகக்ள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற, மத்திய அரசின் முழு உத்தரவாதம் கொண்ட ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் தான் தபால் நிலையத்தின் 'சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்' (SCSS).
திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முதலீட்டு வரம்பு
இது முற்றிலும் 'ஜீரோ ரிஸ்க்' கொண்ட ஒரு திட்டமாகும். இதில் முதலீடு செய்யப்படும் அசல் பணத்திற்கு அரசு முழுப் பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், தம்பதியராக இணைந்து கூட்டு கணக்கு (Joint Account) துவங்கினால் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் பெற்றுக் கொள்ள முடியும்.
23
முதிர்வு காலம் மற்றும் வட்டி விவரம்
இத்திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி, ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை (Quarterly) முதலீட்டாளர்களின் கணக்கில் தடையின்றி வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகள் முடியும் முன்பே அவசரத் தேவைக்காக கணக்கை முடித்துக் கொள்ளும் வசதி இருந்தாலும், விதிமுறைகளின்படி குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
33
மாதம் ரூ.17,000 வருமானம் பெறுவது எப்படி?
இத்திட்டத்தின் மூலம் நீங்கள் மாதம் ரூ.17,000-க்கும் மேல் நிலையான வருமானம் பெற விரும்பினால், ஒட்டுமொத்தமாக ரூ.25 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை வட்டித் தொகையாக ரூ.51,250 உங்கள் கணக்கிற்கு வந்து சேரும். இதனை மாதக் கணக்கில் பிரித்துப் பார்த்தால், தோராயமாக ரூ.17,000-க்கும் மேல் மாதாந்திர வருமானம் எளிதாகக் கிடைக்கும். இந்த வட்டி வருமானம் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும்.
வயதான காலத்தில் வழக்கமான வருமானம் இல்லாதவர்களுக்கும், தங்களின் ஓய்வூதியத் தொகையை பாதுகாப்பாக முதலீடு செய்து, மாதந்தோறும் நிலையான லாபம் ஈட்ட நினைப்போருக்கும் இந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டம் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.