மூத்த குடிமக்கள் டிக்கெட் புக் செய்யும்போது, அதற்கான ஆப்ஷனை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, ஒரு PNR-ல் ஒன்று அல்லது இரண்டு மூத்த குடிமக்கள் பயணம் செய்தால் மட்டுமே லோயர் பெர்த் கோட்டா பொருந்தும். ஒருவேளை, ஒரே டிக்கெட்டில் இரண்டு, மூன்று அல்லது நான்கு மூத்த குடிமக்களுக்கு புக் செய்தால், இந்த கோட்டா உங்களுக்குப் பொருந்தாது. அப்போது உங்களுக்கு மிடில் அல்லது அப்பர் பெர்த் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரயிலில் காலி பெர்த்கள் இருக்கும்போது மட்டுமே மூத்த குடிமக்களுக்கான கோட்டா கிடைக்கும். அதாவது, நீங்கள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால், லோயர் பெர்த்கள் ஏற்கெனவே நிரம்பியிருக்கலாம். அதனால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்காது. ஒருவேளை பெர்த் காலியாக இருந்தால், சிஸ்டம் தானாகவே உங்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்கிவிடும்.