தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. 8.2% வட்டியுடன், இந்த திட்டம் காலாண்டு வருமானத்தை உறுதி செய்கிறது.
ஓய்வுக்குப் பிறகு வருமானம் குறையும் என்ற எண்ணம் பலருக்கும் கவலையாக இருக்கும். அந்த நேரத்தில் நிம்மதியாக வாழ்க்கையை நடத்த உதவும் ஒரு நல்ல திட்டமாக தபால் துறையின் அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) பார்க்கப்படுகிறது. ஒருமுறை தொகையாக பணம் முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் காலாண்டு தோறும் வருமானம் பெறலாம். சரியான திட்டமிடலுடன் மாதம் சுமார் ரூ.20,000க்கு மேல் வருமானம் பெறும் வாய்ப்பும் இதில் உள்ளது.
25
8.2% வட்டி திட்டம்
இந்த திட்டத்தின் முக்கிய பலம் பாதுகாப்பு. அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்குவதால் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரத்தில், 8.2% வரை வட்டி வழங்கப்படுவது இதை இன்னும் கவர்ச்சியாக மாற்றுகிறது. பல வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை விட இது உயர்ந்ததாக இருப்பதால், “பாதுகாப்பு + நல்ல வருமானம்” என்ற இரட்டை நன்மையை இந்த திட்டம் தருகிறது.
35
மாத வருமான திட்டம்
முதலீட்டை தொடங்க பெரிய தொகை தேவையில்லை. குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்தாலே இந்த திட்டத்தில் சேரலாம். மேலும், வருமான வரி சலுகையும் இதில் கிடைக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை கழிவு பெற முடியும். அதனால், இது ஒரு சேமிப்பு திட்டமாக மட்டுமல்ல, வரி சேமிப்பிற்கும் உதவும்.
வயது வரம்பும் இந்த திட்டத்தில் முக்கியமான அம்சம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிப்பட்ட அல்லது இணை கணக்காக திறக்கலாம். VRS எடுத்தவர்கள் 55 முதல் 60 வயதுக்குள் இருந்தாலும் சேர முடியும். பாதுகாப்பு துறையில் பணியாற்றியவர்கள் 50 வயது முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். அந்த காலத்துக்கு முன்பு பணத்தை எடுத்தால் சில அபராதங்கள் இருக்கும்.
55
வரி சலுகை திட்டம்
முதலீட்டு வரம்பைப் பார்த்தால், தனி கணக்கில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இணை கணக்கில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உதாரணமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். இது காலாண்டுக்கு ரூ.61,500 ஆகவும், மாதந்தோறும் சுமார் ரூ.20,500 வருமானமாகவும் கிடைக்கும். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தேவைப்படுவோருக்கு இது ஒரு நம்பகமான தேர்வாக இருக்கும். அருகிலுள்ள தபால் நிலையத்தில் எளிதாக கணக்கு தொடங்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.