தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கனவாக போயிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆண் முதல் பெண்கள் உட்பட தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றாலும் பெண்கள் முதலில் யார் கழுத்தில் எந்த விதமான நகைகளை போட்டுள்ளார்கள் என்பதை பார்ப்பது வழக்கம். ஆனால் தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கனவாக போயிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
25
விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?
இதனால் ஏழ்மை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருந்த போதிலும் நகை கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த விலை உயர்வுக்கு போர் பதற்றம், சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
35
நேற்றைய தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,160க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய (ஏப்ரல் 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,382ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.123,056ஆக விற்பனையாகிறது.
55
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. ஒரு கிராம் வெற்றி 5 ரூபாய் குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.265,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.