BSNL Plan: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் விலையை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் பிஎஸ்என்எல் சூப்பரான ஆஃபர்களை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறந்து வருகிறது. குறிப்பாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் விலையை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சூப்பரான ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியைில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ரூ.599-க்கு கிடைக்கும் இந்த பிளான், குறைந்த செலவில் அதிக இன்டர்நெட் தேவைப்படுபவர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது.
27
இந்த பிளானில் ஸ்பெஷல் என்ன?
பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ள இந்த ரூ.599 ப்ரீபெய்ட் பிளான், முக்கியமாக அதிக டேட்டா யூஸ் செய்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில் யூஸர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மற்ற நிறுவனங்கள் விலையை உயர்த்தும் போது, பிஎஸ்என்எல் இந்த அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.
37
ஆஃபர்கள் விவரம்
இந்த ரூ.599 பிளானில் தினமும் 3GB அதிவேக டேட்டா கிடைக்கும். அதாவது, 70 நாட்களில் மொத்தம் 210GB டேட்டாவை யூஸர்கள் பயன்படுத்தலாம். டேட்டாவுடன், இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேசும் வசதியும் உள்ளது. மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக பெறலாம். கூடுதல் கட்டணமின்றி ஃப்ரீ நேஷனல் ரோமிங் வசதியும் உண்டு.
நாள் முழுவதும் போன் உபயோகிப்பவராக இருந்தால் யூடியூப் வீடியோ, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது அல்லது ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் செய்பவர்களுக்கு இந்த பிளான் யூஸ்ஃபுல்லா இருக்கும். மாணவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் கேமர்களுக்கு தினமும் 3GB டேட்டா என்பது மிக அதிகம். பட்ஜெட் விலையில் இது சூப்பர் பிளான் ஆகும்.
57
ஓடிடி இலவசம்
இந்த பிளான் டேட்டா, காலிங் உடன் முடிந்துவிடவில்லை. இதில் BiTV செயலிக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் யூஸர்கள் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கலாம். சில ஓடிடி நிகழ்ச்சிகளையும் கூடுதல் கட்டணமின்றிப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது, இன்டர்நெட் உடன் என்டர்டெயின்மென்ட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.
67
விரைவில் பிஎஸ்என்எல் 5G சேவை
பிஎஸ்என்எல் தற்போது தனது நெட்வொர்க்கை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் புதிய 4G டவர்களை அமைத்து வருகிறது. விரைவில் 5G சேவைகளையும் தொடங்க தயாராகி வருகிறது. அரசின் ஆதரவுடன் பிஎஸ்என்எல் சேவைகள் இன்னும் தரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
77
பிஎஸ்என்எல் சிக்னல் சரிபார்க்கவும்?
நீங்கள் 4G ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, குறைந்த பட்ஜெட்டில் அதிக டேட்டா விரும்பினால், கண்டிப்பாக இந்த பிளானை தேர்வு செய்யலாம். குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷன். ஆனால், ரீசார்ஜ் செய்வதற்கு முன் உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் சிக்னல் எப்படி இருக்கிறது என்பதை ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.