RD Scheme in Post Office : தபால் நிலையங்களில் குறைந்த முதலீடு செய்து ரூ.25 லட்சம் வரை லாபம் பார்க்கும் ஒரு திட்டம் உள்ளது. அது குறித்து உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
தபால் அலுவலகத்தில் உள்ள தொடர் வைப்பு நிதி (RD) என்பது நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான சேமிப்பு திட்டமாகும். தபால் அலுவலகத்தில் ஏற்கனவே நிறைய திட்டங்கள் உள்ளது. ஆனால் தொடர் வைப்பு நிதியில் குறைந்த முதலீடு மூலம் நிறைய லாபம் பார்க்க முடியும். அதை எப்படி செய்வது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். அதாவது 60 மாதங்கள். குறைந்தபட்ச முதலீடு மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம். அதிகபட்ச முதலீடு மற்றும் உச்சவரம்பு எதுவும் இல்லை. ரூ.10-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனிநபர்கள், மைனர்கள் (பெற்றோர் பெயரில்) அல்லது மூன்று நபர்கள் வரை சேர்ந்து கூட்டுக்கணக்காகவும் தொடங்க முடியும்.
36
RD வட்டி விகிதம் என்ன?
மத்திய அரசு தபால் அலுவலகத்தில் உள்ள RD திட்டத்திற்கான விகிதத்தை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும். தற்போதைய நிலவரப்படி 6.7% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி என்பது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு அசலுடன் சேர்க்கப்படும். இதனால் உங்கள் பணம் வேகமாக வளர்சி அடையும். கணக்கு தொடங்கி ஒரு வருடம் முடிந்து 12 தவணைகள் செலுத்திய பிறகு சேமிப்பில் 50% வரை கடனாகப் பெறலாம். இந்த கடனுக்கான வட்டி RD வட்டி விகிதத்தை விட 2% அதிகமாக இருக்கும்.
கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகள் கழித்து நீங்கள் விரும்பினால் கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆனால் அப்போது சேமிப்பு கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். தவறினால் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஒரு ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். தொடர்ந்து நான்கு மாதங்கள் பணம் செலுத்தாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
56
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
மத்திய அரசால் நடத்தப்படுவதால் இந்த திட்டம் 100% பாதுகாப்பானது. சந்தை மாற்றங்கள் காரணமாக வட்டி விகிதம் குறையாது. கணக்கு தொடங்கும்போது என்ன வட்டியோ அதுவே இறுதி வரை கிடைக்கும். இந்தியாவிற்குள் எந்த ஒரு தபால் அலுவலகத்திற்கும் உங்கள் கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு. 5 ஆண்டுகள் முடிந்த பிறகு வட்டியுடன் கூடிய மொத்த பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பணத்தை எடுக்காமல் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வசதியும் உண்டு.
66
ரூ.25 லட்சம் ரிட்டன்ஸ்
ரூ.25 லட்சம் ரிட்டன்ஸ் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இப்படியாக பத்து வருடம் அதாவது 120 மாதங்கள் முதலீடு செய்தால் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.25,62,822 கிடைக்கும். இதில் உங்கள் முதலீடு ரூ.18,00,000. வட்டி மட்டும் ரூ.7,62,822 ஆகும். மாதம் ரூ.15,000 ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் ரூ.10,70,492 கிடைக்கும். RD திட்டத்தின் சிறப்பு அம்சம் மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இவ்வாறு செய்யும் பொழுது லாபம் கூடுதலாக கிடைக்கும். மேலும் எந்த தடையும் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டையும் தொடரலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.