பாதுகாப்பான முதலீட்டுக்கு தபால்துறை வழங்கும் பக்காவான சேமிப்புத் திட்டம்!

First Published | Mar 22, 2023, 9:15 PM IST

தபால் துறை வழங்கும் திட்டங்களில் நிரந்தர வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் வழங்கக்கூடிய சிறப்பான திட்டமாக விளங்கி வருகிறது.

Post Office Time Deposit scheme will fetch you higher returns than fixed deposit with tax exemptions

நடுத்தர வர்க்கத்தினர் பணத்தைச் சேமிக்க தபால் சேமிப்பு திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைக்கும் அனைவருக்கும் அஞ்சல்துறை வழங்கும் திட்டங்கள் பயனுள்ளவை. அதிக லாபம் தரக்கூடிய பல திட்டங்களை தபால் துறை அளித்து வருகிறது.

அந்த வகையில் தொடர் வைப்பு நிதி கணக்கு சிறப்பான பலன்களை வழங்குகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்ச மாதத் வைப்புத் தொகை 100 ரூபாய் மட்டுமே.

Tap to resize

தபால் துறை தொடர் வைப்பு நிதிக்கு 5.8 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது. ஒவ்வொரு காலாண்டும் இந்த வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றி தீர்மானிக்கிறது. எனவே இந்த வட்டியில் சிறிய ஏற்ற இறக்கம் காணப்படலாம்.

தொடர் வைப்பு நிதியை ஆரம்பித்த ஓர் ஆண்டுக்குப் பிறகு, தேவைப்பட்டால் இருப்புத் தொகையில் 50 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல அப்போதைய இருப்புத் தொகையில் 50 சதவீதத்தை கடனாகவும் பெற வாய்ப்பு உள்ளது.

மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் தொடர் வைப்பு நிதியில் செலுத்தி வந்தால், 10 ஆண்டுகள் கழித்து 5.8 சதவீத வட்டியுடன் ரூ.16.26 லட்சம் கிடைக்கும். அபாயம் இல்லாத சேமிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தபால் அலுவலகத்தில் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Latest Videos

click me!