
எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. இதற்காக முதலீடு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். வெவ்வேறு முதலீட்டு விருப்பங்கள் இருக்கும் நிலையில், சிலர் பாதுகாப்பான முதலீட்டை நோக்கியும், சிலர் ஆபத்தான முதலீட்டை நோக்கியும் செல்கின்றனர்.
பாதுகாப்பான முதலீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்புவோருக்கும் பல்வேறு திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் செயல்படுத்தி வருகிறது. அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் ஒரு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. குறைந்த முதலீட்டில் 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாய் நிதியை உருவாக்க முடியும். சிறு சேமிப்புகள் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
தினமும் 100 ரூபாய் சேமித்து தபால் அலுவலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல லாபத்தைப் பெறலாம். RD திட்டத்தில் முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.100 அதாவது மாதம் ரூ.3000 சேமிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகு லட்சக்கணக்கான பணத்தை சேமிக்க முடியும்..
ரூ.150 மட்டும் எடுத்து வைங்க.. உங்கள் குழந்தைக்கு சொளையா 7 லட்சம் கிடைக்கும்!
போஸ்ட் ஆபிஸின் RD 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.. இதனுடன், குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மாதம் ரூ.3000 அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.100 முதலீடு செய்தால், இந்த 5 ஆண்டுகளில் ரூ.180000 சேமிக்கப்படும். 6.7 சதவீத வட்டி விகிதம் என்ற அடிப்படையில் சுமார் ரூ.2,14,097 கிடைக்கும்.
கிட்டத்தட்ட அனைத்து தபால் அலுவலக திட்டங்களும் பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் இந்தத் திட்டங்களில் வட்டி விகிதங்களும் அதிகமாக உள்ளதால், குறைந்த அளவு முதலீடு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. RD திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. வைப்புத் தொகையில் 50 சதவீதம் வரை கடன் வசதியைப் பெறலாம். இதனுடன், முதலீட்டை 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால், முதிர்வு முடிந்த பிறகும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் வசதி உள்ளது.
பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசு! உடனே அப்ளை பண்ணுங்க!
போஸ்ட் ஆபிஸில் RD கணக்கைத் திறப்பதும் மிகவும் எளிதானது. நாட்டின் எந்தவொரு குடிமகனும் RD திட்டத்தில் கணக்கைத் திறக்கலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களில் மாதம் ரூ.100 தொடர் வைப்புத் தொகையைத் திறக்கும் வசதி உள்ளது. இதனுடன் கூட்டு அல்லது ஒற்றை கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. இதற்கு ஆதார் அட்டை, புகைப்படம், பான் கார்டு மற்றும் பிற பொதுவான ஆவணங்கள் தேவை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.