அதன்படி சேமிப்பு கணக்கை பொறுத்தவரை ஒரு நிதியாண்டில் மொத்த ரொக்க வைப்பு வரம்பு ₹10 லட்சம் ஆகும். ₹10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் இருந்தால், வங்கி வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ₹50,000 அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு, வைப்பாளர் தங்கள் பான் கார்டை வழங்க வேண்டும். அரிதாக பணத்தை டெபாசிட் செய்யும் நபர்களுக்கு, வழக்கமான அறிக்கை இல்லாமல் ₹2.5 லட்சம் வரை ஒரு முறை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. நடப்பு கணக்கு ஆனது ஒரு நிலையான நடப்புக் கணக்கு ஆண்டுக்கு ₹50 லட்சம் வரை ரொக்க வைப்புகளை அனுமதிக்கிறது.