வெறும் 1,500 ரூபாய் முதலீடு செய்து ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் அற்புதமான திட்டம்!

தபால் நிலையத்தில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வெறும் மாதம் ரூ.1500 டெபாசிட் செய்து முதிர்வு காலத்தில் ரூ.5 லட்சம் பெற முடியும்.

Post Office Savings in Public Provident Fund Scheme

வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கும். அவசரமான பணத் தேவைகளையும் பூர்த்தி செய்யும். இத்தகைய பாதுகாப்புக்காக தங்கள் சேமிப்பை முதலீடு செய்யும் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பான ஐடியா பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம்.

PPF interest in Post Office

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வெறும் மாதம் ரூ.1500 டெபாசிட் செய்து முதிர்வு காலத்தில் ரூ.5 லட்சம் பெற முடியும். பொது வருங்கால வைப்பு நிதி என்பது உங்கள் முதலீட்டிற்கு 7.1% வட்டி வழங்குகிறது. இது உயர் வட்டி விகிதம் கொண்ட தபால் அலுவலக திட்டமாகும்.


Public Provident Fund Scheme

வருங்கால வைப்பு நிதி திட்டமானது 15 வருடம் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. முதிர்ச்சியடைந்த பிறகும் 5 வருடங்கள் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் லாபத்தை மேலும் பெருக்கிக் கொள்ள முடியும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

Post Office Schemes

குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.500  மட்டும் செலுத்தி பிபிஎஃப் கணக்கை அருகில் உள்ள தபால் நிலையத்திலும் தொடங்கலாம். இந்தத் திட்டம் அதிக வட்டி விகிதங்களின் பலனை மட்டும் கொடுக்கவில்லை. வரிச் சலுகையும் கிடைக்கும். நிலையான வருமானம் கிடைக்கவும் உத்தரவாதம் கொடுக்கும்.

PPF Scheme in Post office

இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டுமானால், ரூ.1500 மாதம் தோறும் முதலீடு செய்யலாம். அதாவது ஆண்டுக்கு ரூ.18,000 வீதம் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2,70,000 முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தின்படி, 15 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 2,18,185 வட்டி கிடைக்கும்.

PPF investment

15 வருடம் கழித்து முதிர்வுத் தொகையாக ரூ. 4,88,185, கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம், கையில் கிடைக்கும். அதிக லாபம் பெற விரும்பினால், இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

Latest Videos

click me!