கடன் வாங்காமல் வீடு வாங்கலாம்... கொஞ்சம் பிளான் பண்ணி, இந்த ரூட்டை ட்ரைப் பண்ணுங்க!

First Published | Sep 15, 2024, 4:50 PM IST

வீடு வாங்க விரும்பும் மிடில் கிளாஸ் மக்கள் கடன் வாங்காமலே தங்கள் கனவு இல்லத்தை வாங்க வழி உள்ளது. அதற்கு நிபுணர்கள் காட்டும் வழி என்ன என்று பார்க்கலாம்.

வீடு வாங்குவது என்பது சாமானியர்களின் கனவு. இந்த கனவை நிறைவேற்ற பலர் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்கள். சிலர் முன்பணத்திற்கு போதுமான பணத்தை சம்பாதித்து, மீதியை கடன் மூலம் செலுத்துகிறார்கள். ஆனால் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த பல ஆண்டுகள் ஆகும்.

அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்கினாலும் அதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது என்று சில நிபுணர்கள். கூறுகின்றனர். இதுபோன்ற சமயங்களில், ஒரு சிறிய யோசனையைப் பின்பற்றினால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கடன் ஏதுமின்றி வீடு வாங்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos


வாங்க விரும்பும் பிளாட்டின் விலை ரூ.50,00,000 என்று வைத்துக்கொள்வோம். இதில் ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தத் தயாராக இருந்தால், மேலும் ரூ.40 லட்சம் கடன் வாங்க வேண்டும். அதற்குப் பதிலாக முதலில், ரூ.10 லட்சத்தை ஒரு முறை முதலீடாக மியூச்சுவல் ஃபண்டுகளில் போட வேண்டும். இது ஆண்டுதோறும் 15 சதவிகிதம் வளர வாய்ப்பு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் சுமார் ரூ.40 லட்சம் மிச்சமாகும்.

ரூ.40 லட்சம் கடன் பெற்று வீடு வாங்கினால், 20 ஆண்டுகளுக்கு 9 சதவீத வட்டியைக் கணக்கிட்டால், மாதம் ரூ.36 ஆயிரம் EMI செலுத்த வேண்டும். இதில், தற்போதைய வீட்டின் வாடகையாக ரூ.10 ஆயிரம் ஒதுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.26 ஆயிரத்தை படிப்படியான முதலீட்டு முறை முதலீடு செய்தால் 14 சதவீத வட்டி கிடைக்கும். இதற்கு மியூச்சுவல் ஃபண்டில் பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த வகையில் மொத்தம் ரூ.68 லட்சம் வசூலாகும்.

முதலில் செய்த ரூ.10 லட்சம் முதலீட்டில் இருந்து ரூ.40 லட்சம் வரை கிடைக்கும். பத்து வருடம் மாதம்தோறும் ரூ.26 ஆயிரம் முதலீடு செய்ததில் இருந்து ரூ.68 லட்சம் வரை கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைகளில் மொத்தம் ரூ.1.08 கோடி இருக்கும். ரியல் எஸ்டேட் பணவீக்கத்தை கணக்கிட்டாலும் பத்து வருடங்கள் கழித்து ஒரு கோடி ரூபாயில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு பிளாட் வாங்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

click me!