ரொம்ப கெடுபிடி இல்லாமல் அதிக வட்டி கொடுக்கும் ஏர்டெல் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டம்!

First Published Sep 15, 2024, 1:55 PM IST

முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது ஏர்டெல் ஃபைனான்ஸ் (Airtel Finance) நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுக்கும் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தைத் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Airtel Finance Fixed Deposit Investment

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை திட்டமிட்டு சேமிக்கிறீர்களா? பணியில் இருக்கும்போதே சேமித்து வைத்தால், முதுமைக் காலத்தில் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நிலையான வருமானத்துடன் வசதியான வாழ்க்கை வாழ முடியும். இதற்கு முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. பங்குச் சந்தையில் முதலீடு, மியூச்சுவல் ஃப்ண்டு முதலீடு, என பல போன்ற ரிஸ்க்குடன் அதிக லாபம் கொடுக்கும் வழிகள் உள்ளன.

Airtel Finance Fixed Deposit Account

ஆனால், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருப்பதுதான் பிக்ஸட் டெபாசிட் திட்டம். பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெற போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கியில் நிலையான வைப்புநிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கு தொடங்க புதிய வாய்ப்பு அறிமுகமாகியுள்ளது.

Latest Videos


Airtel Finance FD Service

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஏர்டெல் ஃபைனான்ஸ் (Airtel Finance) மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த வசதியை வழங்க நாட்டின் முன்னணி NBFCகள் மற்றும் சிறு நிதி வங்கிகளுடன் ஏர்டெல் கைகோர்த்திருக்கிறது.

Airtel Finance Fixed Deposit Scheme

ஏர்டெல் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திம் கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது. ஏர்டெல் தேங்கஸ் (Airtel Thanks) செயலி மூலம் ஈசியாக பிக்ஸட் டெபாசிட் கணக்கை ஆரம்பிக்கலாம் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்காக, உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ஷிவாலிக் வங்கி போன்ற நிறுவனங்களுடன் ஏர்டெல் ஃபைனான்ஸ் இணைந்து செயல்படுகிறது.

Airtel Finance Fixed Deposit Interest

ஏர்டெல் பைனான்ஸ் மூதலீட்டுக்காக எந்த வங்கிக் கணக்கையும் திறக்கத் தேவையில்லை. ஏர்டெல் தேங்க்ஸ் மொபைல் ஆப் மூலம் FD கணக்கு பதிவு செய்யலாம். வழக்கமாக பிக்ஸட் டெபாசிட்களில் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும் செயல்முறை எளிதானது அல்ல. அதுபோன் தேவை ஏற்படும்போது, வட்டி விகிதங்கள் நிச்சயதாகக் குறைக்கப்படும். ஆனால் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த ஒரு வாரம் கழித்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கும் வசதி இருப்பதாக ஏர்டெல் ஃபைனான்ஸ் கூறுகிறது.

Airtel Thanks App

ஏர்டெல் ஃபைனான்ஸ் தற்போது ஃப்ளெக்ஸி தனிநபர் கடன்கள், கோ பிராண்ட் இன்ஸ்டா ஈஎம்ஐ கார்டு, தங்கக் கடன்கள், கோ பிராண்ட் கிரெடிட் கார்டு ஆகிய சேவைகளை ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமே வழங்குகி வருகிறது. தொழில் கடன்களும் விரைவில் கிடைக்கும் என்று ஏர்டெல் கூறியுள்ளது. இந்நிலையில், ஏர்டெல் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் தற்போதைய 9.10 சதவீத வட்டி விகிதத்தின்படி, ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் ரூ. 44,463 வட்டி கிடைக்கும். அதாவது ஒரு வருடத்துக்குப் பிறகு முதலீடு செய்த தொகை ரூ. 5,44,463 ஆகக் கிடைக்கும்.

click me!