333 நாளுக்கு முதலீடு செய்தால் ரூ. 1 லட்சம்... புதிய திட்டத்தை கொண்டு வந்த அரசு வங்கி!

First Published Sep 15, 2024, 3:48 PM IST

யூனியன் வங்கி அதிக வட்டியுடன் 333 நாட்களுக்கான Union Sumvridhi 333 சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) புதிய சிறப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பல வங்கிகள் சிறப்பு FD திட்டங்களை வழங்குவது தெரிந்ததே. வழக்கமான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறப்புத் திட்டங்கஙளில் அதிக வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்கள் பொது மக்களை விட சுமார் 0.5% அதிக வட்டியும் பெறலாம்.

யூனியன் வங்கி 333 நாட்களுக்கு யூனியன் சம்விர்த்தி 333 (Union Sumvridhi 333) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 1000 டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு ரூ. 3 கோடி வரை. ரூ. 3 கோடிக்கு மேல் செய்யும் டெபாசிட் மொத்த வைப்புத்தொகையாகக் கருதப்படும்.

Latest Videos


union bank of india

இந்தத் திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறைந்தபட்சம் 7 நாட்களுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறலாம். ஆனால் முன்கூட்டியே திரும்பப் பெற்றால் வட்டி விகிதத்தில் 1 சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 333 நாட்களுக்குச் செய்யும் முதலீட்டுக்கு பொது மக்கள் 7.40 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீத வட்டியும், சூப்பர் சீனியர்களுக்கு 8.15 சதவீத வட்டி வழங்கப்படும்.

इसके बाद वह बैंक उस खाते के ओनर को ​सूचित करेगा और पैसे आपके अकांउट में वापस ट्रांसफर करने को कहेगा। इसलिए आपको उस बैंक को सारी स्थिति से अवगत कराना होगा। इसके बाद वह बैंक उस खाते के ओनर को ​सूचित करेगा और पैसे आपके अकांउट में वापस ट्रांसफर करने को कहेगा।

இப்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்ச லாபத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் முதிர்வுக் காலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்துகொள்வோம். ஒரு லட்சம் ரூபாயை 333 நாட்கள் முதலீடு செய்தால், 7.40 சதவீத வட்டி விகிதத்தில் பொது குடிமக்கள் ரூ. 6,825 வட்டி பெறுவார்கள். மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீத வட்டியில் ரூ. 7,287 வட்டி கிடைக்கும். சூப்பர் சீனியர்களுக்கு 8.15 சதவீதம் வட்டி விகிதத்தில் ரூ. 7,517 வட்டி பெறலாம். இதுவே ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால பொது குடிமக்கள் ரூ. 34,129, மூத்த குடிமக்கள் ரூ. 36,440, சூப்பர் சீனியர்கள் ரூ.37,590 வட்டி பெற முடியும்.

डोरस्टेप बैंकिंग सर्विसेस (Door Step Banking Services) के जरिए कस्टमर चेक जमा करने, पैसे निकालने और जमा करने, लाइफ सर्टिफिकेट जमा करने जैसी कई सुविधाओं का घर बैठे फायदा उठा सकते हैं। इस सर्विस से 70 साल से ज्यादा उम्र के बुजुर्ग, दिव्यांग व दृष्टि बाधित लोगों को अपने घर पर ही बैंकिंग से जुड़ी सर्विसेस मिलेगी। (फाइल फोटो)

ஆன்லைனில் இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால், யூனியன் வங்கியின் இணையதளம் அல்லது VYOM வங்கி செயலியைப் பார்வையிடலாம். அல்லது அருகில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு நேரடியாகச் சென்று இத்திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீட்டின் அடிப்படையில் கடன் பெறும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!