தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. 7.40% வட்டி விகிதத்தில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தர வருமானமாகப் பெறலாம்.
தபால் நிலையத்தில் பாதுகாப்பான முதலீடு தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. ஒரே முறை தொகையாக முதலீடு செய்தால், மாதம் மாதம் ரூ.5,500 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும் ஒரு திட்டம் தற்போது அதிக கவனம் செலுத்துகிறது. அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) என்ற இந்த சேமிப்பு திட்டம், குறிப்பாக ஓய்வுக்கால வருமானத்தை உறுதி செய்ய விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாதுகாப்பான முதலீடு, நிச்சய வருமானம் என்பதால் பலரும் இதை தேர்வு செய்து வருகின்றனர்.
25
மாதம் ரூ.5,500 வருமானம்
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, கிடைக்கும் வட்டி தொகை மாதந்தோறும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது முதலீட்டாளரின் வட்டி தான் மாத வருமானமாக வழங்கப்படுகிறது. மேலும் அரசு ஆதரவு உள்ள திட்டமாக இருப்பதால், முதலீட்டுத் தொகை பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கணக்கை திறக்க குறைந்தபட்சம் ரூ.1,000 போதுமானது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இதை தொடங்கலாம். தனிநபர் கணக்கு (தனி) இணை கணக்கு (கூட்டு) கிடைக்கிறது.
35
தபால் நிலைய மாத வருமான திட்டம்
தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது. கணக்கின் கால அளவு 5 ஆண்டுகள் (மெச்சூரிட்டி) ஆகும். இந்தத் திட்டம் ‘Lump Sum Investment’ வகையைச் சேர்ந்தது. அதாவது ஒரே முறை பணம் செலுத்தி விட்டால், அதற்கான வட்டி அடுத்த மாதம் முதல் தொடங்கி, மெச்சூரிட்டி வரை தொடர்ந்து கிடைக்கும். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்ய முடியும். இணை கணக்காக இருந்தால் அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம் வரை செய்யலாம்.
மாதம் ரூ.5,500 வருமானம் எப்படி கிடைக்கும் என்றால், ரூ.9 லட்சம் (தனி கணக்கு) முதலீடு செய்தால் 7.40% வட்டி கணக்கீட்டில் மாதத்திற்கு சுமார் ரூ.5,500 வருமானம் கிடைக்கும். இணை கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாத வருமானம் சுமார் ரூ.9,250 வரை உயரலாம். ஆனால் 5 ஆண்டுகள் முடிவதற்கு முன் கணக்கை மூடினால் அபராத கழிவு இருக்கும். 1 முதல் 3 ஆண்டுகள் மூடினால் 2% கழிவு, 3 முதல் 5 ஆண்டுகள் மூடினால் 1% கழிவு விதிக்கப்படும்.
55
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவது எளிது. அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கு திறப்பு படிவம், KYC படிவம் பூர்த்தி செய்து, PAN கார்டு நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். பாதுகாப்பான முதலீட்டில் மாத வருமானம் பெற நினைப்பவர்கள், திட்ட விதிமுறைகளை முழுமையாக அறிந்து விண்ணப்பிப்பது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.