பிரதமர் நரேந்திர மோடி, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் உள்ள ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான கோரப்படாத வைப்புத்தொகைகளை மக்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று 'உங்கள் பணம், உங்கள் உரிமை' பிரச்சாரத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் நிறுவனங்களில் பல ஆண்டுகளாகக் கிடக்கின்ற ரூ.1 லட்சம் கோடியை மக்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ எனப்படும் தேசிய பிரச்சாரத்தின் வங்கிக் கணக்குகளில் காணாமல் போன டெபாசிட்கள், செலுத்தப்படாத டிவிடெண்டுகள், காப்பீட்டுத் தொகை உரிமையாளர்கள் பெற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
24
காப்பீட்டு கோரப்படாத தொகை
வங்கிகளில் மட்டும் ஏறத்தாழ ரூ.78,000 கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14,000 கோடி, மியூச்சுவல் ஃபண்ட்களில் ரூ.3,000 கோடி மற்றும் டிவிடெண்டுகளில் ரூ.9,000 கோடி வரை யாரும் கோராத நிதி கிடக்கிறது என்று மோடி தெரிவித்தார். “இவை அரசு பணம் அல்ல, உழைப்பாளி குடும்பங்களின் சேமிப்புகள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
34
மறக்கப்பட்ட நிதி
மறக்கப்பட்ட நிதிகளை எளிதாக சரிபார்க்க அரசு பல அதிகாரப்பூர்வ தளங்களை உருவாக்கியுள்ளது நாடு முழுவதும் தற்போது 477 மாவட்டங்களில் உதவி முகாம்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு தனிப்பட்ட உதவி கிடைக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைகள் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன.
"இது உங்கள் பணம் - அதை மீண்டும் பெற உங்களுக்கு முழு உரிமை உள்ளது" என்று மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையும் வகையில் அமைப்பு தயார் நிலையில் உள்ளது, இன்னும் அதிகமான மக்கள் தங்கள் மறக்கப்பட்ட நிதிகளை மீட்டெடுப்பர் என அரசு நம்புகிறது. எனவே மக்கள் தங்கள் நிதிகளை மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.