மூத்த குடிமக்கள்.. 45+ பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே.. சூப்பர் அப்டேட் இதோ.!

Published : Dec 11, 2025, 08:45 AM IST

இந்திய ரயில்வே புதிய விதிமுறையின்படி, மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பயணிகளுக்கு நல்ல செய்தியை வழங்கி உள்ளது. இந்த மாற்றம் பயணத்தை எளிதாக்குகிறது.

PREV
15
மூத்த குடிமக்கள் சலுகைகள்

இந்தியா முழுவதும் தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இவர்களின் பயணத்தை மேலும் வசதியாக ரயில்வே தொடர்ந்து பல மாற்றங்கள் செய்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, குறிப்பிட்ட பிரிவுகளுக்கான கீழ் படுக்கை ஒதுக்கீடு தற்போது தானியக்க முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, டிக்கெட் புக்கிங் செய்யும் போது கீழ் படுக்கையை தேர்வு செய்ய மறந்தால் பயணம் சிரமமானதாக மாறும்.

25
45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

ரயில்வேயின் புதிய விதிமுறைப்படி, மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு கீழ்புற படுக்கை தன்னிச்சையாக வழங்கப்படும். காலியான கீழ் படுக்கை இருந்தாலே கணினி முறை உடனடியாக இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கும். அதாவது, இனி டிடிஇ யிடம் பேசிச் சீட் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் பெருமளவு குறையும். கீழ் படுக்கை கிடைக்காமல் இருந்தால், பயணத்தின் போது டிடிஇ அவர்கள் இருக்கும் காலியிடத்தை வழங்குவார்.

35
ரயில்வே கீழ்படுக்கை விதி

ஒவ்வொரு ரயில் கோச்சிலும் கீழ் படுக்கைகள் சிலர் பயன்பாட்டுக்காக முன்கூட்டியே தனியாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்லீப்பர் கோச்சில் 6 முதல் 7 கீழ் படுக்கைகள், தேர்ட் ஏசியில் 4 முதல் 5, மற்றும் செகண்ட் ஏசியில் 3 முதல் 4 வரை கீழ் படுக்கைகள் இந்த பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. உடலால் குறைபாடு உள்ள பயணிகளுக்கான தனி ஒதுக்கீடு ரயில்வேயில் ஏற்கனவே உள்ளது.

45
கர்ப்பிணி பயணிகள் கீழ்படுக்கை

ஸ்லீப்பர் மற்றும் தேர்ட் ஏசி கோச்சுகளில் மொத்தம் நான்கு படுக்கைகள், அதில் இரண்டு கீழ்புறங்கள் அவர்களுக்கு முன்பதிவு செய்யப்படும். மேலும் 2S மற்றும் சேர் கார்களிலும் நான்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளருக்கும் தனியாக இருக்கை வழங்கப்படும்.

55
ரயில்வே புதிய விதி

ஒட்டுமொத்தமாக, கீழ் படுக்கை தேவைப்படுகிற பயணிகளுக்கு ரயில்வே வழங்கும் இந்த புதிய தானியக்க முன்னுரிமை முறை, பயணத்தை மேலும் எளிதாக நிம்மதியாகவும் மாற்றுகிறது. இனி மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு கீழ் படுக்கை கிடைக்காத சிக்கல்கள் பெருமளவு குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories