PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்குமா? வைரல் மெசேஜின் உண்மை இதுதான்!

Published : Jul 17, 2026, 11:04 AM IST

PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைப்பதாக செய்தியின் உண்மையை விளக்குகிறது இந்த கட்டுரை. உண்மையில் என்னதான் நடக்கிறது நாட்டுல யாருக்கு கிடைக்கும் நோட்டுகள், வாங்க தெரிஞ்சுக்கலாம்.

PREV
19
உருட்டப்படும் செய்திகளின் உண்மை நிலை இதுதான்.!

"PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும்", "13 முதல் 65 வயதுடைய அனைவருக்கும் நிதி உதவி" என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையா? உண்மையில் PMJDY திட்டத்தின் கீழ் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? வைரலாகும் செய்தியின் உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.

29
PM ஜன் தன் திட்டம் என்றால் என்ன?

சமூக வலைதளங்களில், குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் "பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 திட்டத்தின் கீழ் 13 முதல் 65 வயதுடைய இந்தியர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது" என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர் உடனடியாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த தகவல் உண்மையல்ல. PMJDY என்பது அனைவருக்கும் நேரடியாக பணம் வழங்கும் திட்டம் அல்ல.

39
PMJDY திட்டத்தின் நோக்கம் என்ன?

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) திட்டம், வங்கிக் கணக்கு இல்லாத மக்களை வங்கி சேவைக்குள் கொண்டு வருவதற்காக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.

49
ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைக்குமா?

சமூக வலைதளங்களில் பரவும் தகவலின்படி,

  1. 13–25 வயதினருக்கு ரூ.50,000 முதல் ரூ.90,000 
  2. 25–65 வயதினருக்கு ரூ.90,000 முதல் ரூ.2,00,000

என்று பணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவலுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, இது தவறான தகவலாகும்.

59
PMJDY திட்டத்தில் உண்மையில் கிடைக்கும் சலுகைகள்

இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குபவர்களுக்கு,

  • ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு 
  • ரூபே டெபிட் கார்டு 
  • தகுதியுள்ளவர்களுக்கு விபத்து காப்பீட்டு பாதுகாப்பு 
  • குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஓவர்டிராஃப்ட் வசதி 
  • அரசு மானியத் தொகைகளை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் வசதி

போன்ற பல நிதிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

69
வைரல் லிங்குகளை ஏன் நம்பக்கூடாது?

பல போலி இணையதளங்கள், அரசு இணையதளம் போல தோற்றமளிக்கும் முகவரிகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. அவற்றில்,

  • ஆதார் எண் 
  • PAN விவரம் 
  • வங்கி கணக்கு எண் 
  • ATM தகவல்கள் OTP

போன்ற தகவல்களை கேட்கலாம். இந்த விவரங்களை பகிர்ந்தால் நிதி மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

79
அதிகாரப்பூர்வ தகவலை எங்கு பார்க்கலாம்?

PM ஜன் தன் திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள,

PMJDY அதிகாரப்பூர்வ இணையதளம் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தகவல்களை பெற வேண்டும்.

89
தமிழக மக்களுக்கு முக்கிய அறிவுரை

சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு தகவலையும் உடனே நம்ப வேண்டாம். குறிப்பாக "இன்றே விண்ணப்பியுங்கள்", "உடனே ரூ.2 லட்சம் கிடைக்கும்", "இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்" போன்ற செய்திகளை கவனமாக அணுக வேண்டும். தெரியாத இணையதளங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

99
யார் சொன்னாலும் நம்பாதீங்க

PM ஜன் தன் திட்டத்தில் அனைவருக்கும் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. இந்த திட்டத்தின் நோக்கம் வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்வதே தவிர, நேரடியாக பணம் வழங்குவது அல்ல. எனவே, அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை சரிபார்க்காமல் பகிர வேண்டாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories