பெர்சனல் லோன் வாங்கலாமா? தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்!

First Published | Sep 4, 2024, 2:47 PM IST

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 முக்கியமான விஷயங்களை நினைவில் வைக்க வேண்டும். அவை என்னென்ன என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Personal Loan Tips

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 முக்கியமான விஷயங்களை நினைவில் வைக்க வேண்டும். அப்போதுதான் சுமூகமாக கடன் பெறவும் அதைத் திரும்பச் செலுத்தவும் ஏதுவாக இருக்கும். அவை என்னென்ன என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Before taking Personal Loan

தனிநபர் கடன் பெறுவதற்கு முன் சில விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்த விஷயங்களை அலட்சியமாகப் புறக்கணித்துவிட்டால், நஷ்டம் அடைய நேரிடும். அதைத் தவிர்க்க சில பயனுள்ள ஆலோசனைகளைத் தெரிந்துகொள்வோம்.

Tap to resize

Personal Loan Interest Rates

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்கள் கடன் மதிப்பெண்ணைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சிறந்த வட்டி விகிதங்கள் கொடுக்கும் வங்கி / நிதி நிறுவனம் எது என்று தெரிந்துகொள்ள வேண்டும். விதிமுறைகளை கவனமாகப் படித்து, அதன்படி திரும்பச் செலுத்த முடியுமா என்று மதிப்பிட வேண்டும். தேவையானதை விட அதிகமாக கடன் வாங்குவதைத் தவிர்த்தால், எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்கும்.

Personal Loan period

தனிநபர் கடன் பெறுவதற்கு முன் சரியான கடன் தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் தொகை எளிதில் திருப்பிச் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். வட்டி விகிதங்களைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

Personal Loan terms and conditions

தனிநபர் கடன் வாங்குவதற்கு முன், பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், விதிமுறைகள், கடனைத் திரும்பச் செலுத்த அளிக்கும் அவகாசம், அபராதம் போன்ற விவரங்களை அறிந்து ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் அவசியம். சிறந்த கடன் வழங்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்ய இது முக்கியமானது.

CIBIL Score for Personal Loan

பெர்சனல் லோன் எடுக்கும்போது சிபில் ஸ்கோர் (CIBIL Score) எவ்வளவு என்றும் செக் செய்ய வேண்டும். சிபில் ஸ்கோர் (CIBIL Score) நன்றாக இல்லாவிட்டால் கடன் கிடைப்பது கடினம். எனவே சிபில் மதிப்பெண் நன்றாக இருக்கும் வகையில் வங்கி பரிவர்த்தனைகளைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Personal Loan providers

தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறவதாக இருந்தால் அவற்றின் அங்கீகாரத்தைப் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஆனால், கூடுமானவரை ஆர்பிஐ அங்கீகாரம் பெற்ற வங்கி ஒன்றின் மூலம் நேரடியாக தனிநபர் கடன் பெறுவது நல்லது. இதன் மூலம் இடைத்தரகர்ளைத் தவிர்க்க முடியும்.

Personal loan repayment

தனிநபர் கடன் பெறும்போது கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடு பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். திரும்பச் செலுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு காலத்தைத் தேர்வுசெய்வது பொருத்தமாக இருக்கும்.

Personal loan hidden charges

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல காரணங்களை முன்னிட்டு மறைமுகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் ஏதும் உள்ளதா என்று கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

Latest Videos

click me!