Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!

Published : Mar 19, 2026, 05:18 PM IST

Egg Tray Business in Tamil : சொந்த ஊரிலேயே நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பேப்பர் முட்டை ட்ரே தயாரிப்பு தொழில் ஒரு சிறந்த வாய்ப்பு. இது குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய, எப்போதும் டிமாண்ட் உள்ள ஒரு மறுசுழற்சி தொழில். 

PREV
15
Egg Tray Business in Tamil

இந்த பிசினஸின் முக்கிய மூலப்பொருளே பழைய பேப்பர்தான். செய்தித்தாள்கள், நோட்டுப் புத்தகங்கள், அட்டைப் பெட்டிகள், ஆன்லைன் டெலிவரி பேக்கேஜிங் அட்டைகள் என கடைகளில் இருந்து வரும் காகிதக் கழிவுகளைப் பயன்படுத்தலாம். தரத்தை மேம்படுத்த, சிறிதளவு வெள்ளை கூழ் (White Pulp) தேவைப்படும். உங்கள் பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடைகாரர்களுடன் ஒப்பந்தம் போட்டால், மூலப்பொருட்கள் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும்.

25
கோழி முட்டை ட்ரே தயாரிப்பு முறை

இந்த பிசினஸில் தயாரிப்பு முறை ரொம்ப சிம்பிள். முதலில், பழைய பேப்பரை தண்ணீரில் ஊறவைத்து கூழாக மாற்ற வேண்டும். பிறகு, அதில் உள்ள பிளாஸ்டிக், பின் போன்ற குப்பைகளை நீக்க வேண்டும். அடுத்து, முட்டை ட்ரே வடிவத்தில் உள்ள அச்சுகள் மூலம் இயந்திரம் ட்ரேக்களை உருவாக்கும். கடைசியாக, அவற்றை 1-2 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். வெயில் அதிகம் உள்ள பகுதிகளில் உற்பத்தி வேகமாக நடக்கும். மழைக்காலத்தில் உலர்த்துவதற்கு ஷெட் அமைப்பது அவசியம்.

35
எவ்வளவு செலவாகும்?

உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து இந்தத் தொழிலைத் தொடங்கலாம். உதாரணமாக, ஒரு செமி ஆட்டோமேட்டிக் மெஷின் வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். முழு ஆட்டோமேட்டிக் பிளான்ட் என்றால் ரூ.10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இந்தத் தொழிலுக்கு குறைந்தபட்சம் 2000–4000 சதுர அடி இடம் தேவை. தண்ணீர் மற்றும் மின்சார வசதி தடையின்றி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறியதாகத் தொடங்கி, பின்னர் தொழிலை விரிவுபடுத்துவது நல்லது.

45
நஷ்டத்தை குறைக்கும் வழி

இந்த பிசினஸ் முழுக்க முழுக்க மெஷினை மட்டும் நம்பி இல்லை. இதற்கு குறைந்தபட்சம் 4–6 வேலையாட்கள் தேவைப்படுவார்கள். பேப்பர் கூழ் தயாரிப்பது, ட்ரேக்களை எடுப்பது, உலர்த்துவது, பேக்கிங் செய்வது போன்ற பணிகள் இருக்கும். மெஷினை reguler-ஆக பராமரிக்க வேண்டும். மழைக்காலத்தில் ட்ரேக்கள் சேதமடையாமல் இருக்க ஷெட் அமைத்தால், நஷ்டத்தைக் குறைக்கலாம்.

55
டிமாண்ட் உள்ள தொழில்

இந்த பிசினஸின் பலமே அதன் டிமாண்ட்தான். கோழிப் பண்ணைகள், முட்டை மொத்த வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் என பல இடங்களில் இதற்கு தேவை அதிகம். ஒரு ட்ரே தயாரிக்கும் செலவு குறைவு என்பதால், மொத்தமாக விற்கும்போது நல்ல லாபம் கிடைக்கும். சேதமடைந்த ட்ரேக்களை மீண்டும் மறுசுழற்சி செய்துவிடலாம் என்பதால் நஷ்டம் மிகக் குறைவு.

அதிக லாபம் பெற சில டிப்ஸ்:

உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணைகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். பழைய பேப்பர்களை மொத்தமாக வாங்கி ஸ்டாக் வையுங்கள். மழைக்காலத்திற்கு முன்பே உலர்த்தும் ஷெட்டை அமைத்திடுங்கள். வாடிக்கையாளர்கள் அதிகமானதும், மெஷினை அப்கிரேடு செய்யுங்கள். 

அரசு வழங்கும் MSME கடன்கள் மற்றும் மானியங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மொத்தத்தில், பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் ஒரு நிலையான வருமானம் தரும் தொழில். சரியான திட்டமிடல் மற்றும் மார்க்கெட்டிங் இருந்தால், உங்கள் ஊரிலேயே மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பது சாத்தியமே.

பொறுப்பு துறப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படை புரிதலுக்காக மட்டுமே. எந்தவொரு தொழிலிலும் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்தத் துறை சார்ந்த நிபுணர்களிடமோ அல்லது அனுபவம் வாய்ந்தவர்களிடமோ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories