மத்திய அரசு தேசிய எக்ஸ்பிரஸ்வே டோல் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய விதி பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதால், பயணிகளின் நிதிச்சுமை குறையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய எக்ஸ்பிரஸ்வே பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழுமையாக செயல்படாத எக்ஸ்பிரஸ்வே பாதைகளில் இனிமேல் முழு டோல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதற்காக மத்திய அரசு National Highways Fee (Determination of Rates and Collection) Rules, 2008 விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருகிறது.
25
தேசிய எக்ஸ்பிரஸ்வே டோல்
இதுவரை, எக்ஸ்பிரஸ்வே முழுமையாக முடிக்கப்படாமல் இருந்தாலும், இயக்கத்தில் உள்ள பகுதியை பயன்படுத்தும் பயணிகளிடம் முழு பாதைக்கும் டோல் வசூலிக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரம் பயணம் செய்தவர்களுக்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
35
புதிய டோல் விதிகள்
புதிய விதிப்படி, எக்ஸ்பிரஸ்வேயில் செயல்பாட்டில் உள்ள பகுதியுக்கே மட்டுமே டோல் வசூலிக்கப்படும். செயல்படாத அல்லது கட்டுமானம் நடைபெறும் பகுதிகளுக்கான கட்டணம் விதிக்கப்படாது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையற்ற நிதிச்சுமை குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாற்றம் காரணமாக பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் செயல்பாட்டில் உள்ள எக்ஸ்பிரஸ்வே பகுதிகளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தால், போக்குவரத்து ஓட்டமும் வேகமாகும்.
55
எக்ஸ்பிரஸ்வே கட்டணம்
சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளைக் காட்டிலும் எக்ஸ்பிரஸ்வே டோல் கட்டணம் 25% அதிகமாக இருந்தது. இனி அந்த அதிக கட்டணம் முழு பாதைக்கு அல்ல, செயல்படும் பகுதிக்கு மட்டுமே விதிக்கப்படும். தனியார் வாகன ஓட்டிகள், லாரி மற்றும் பேருந்து இயக்குநர்களுக்கு இது நன்மை தரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.