புத்தாண்டு என்பது காலண்டர் மாறுவது மட்டுமல்ல. அது நமது அன்றாட வாழ்க்கையிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. 2025 முடிந்து 2026 தொடங்கும் வேலையில், வங்கி சேவைகள் முதல் வரி விதிகள் வரை, ரேஷன் கார்டு முதல் எரிபொருள் விலை வரை பல புதிய விதிகள் நாட்டில் அமலுக்கு வரலாம். இந்த மாற்றங்கள் நேரடியாக பொதுமக்களின் செலவு, சேமிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களை பாதிக்கக்கூடியவை.
இந்த புதிய விதிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், நடுத்தரக் குடும்பங்கள் என அனைவருக்கும் முக்கியமானவை. ஜனவரி 1, 2026 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அதற்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதனால், புத்தாண்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய விதி மாற்றங்களை விரிவாகப் பார்ப்போம்.
2026 முதல் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் வருகிறது. ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் இனி அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்லாமல், வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க முடியும். இது நேரமும் செலவும் சேமிக்கும்.