புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் டிசம்பர் 31 அன்று டெலிவரி சேவைகள் பாதிக்கப்படலாம்.
புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஆன்லைன் டெலிவரி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட உடனடி டெலிவரி சேவைகள் முழுமையாக அல்லது பகுதி அளவில் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வீட்டிலேயே பார்ட்டி நடத்த திட்டமிட்டுள்ள பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
24
டிசம்பர் 31 டெலிவரி
இந்த சேவை நிறுத்தத்திற்கு காரணம், நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் தான். டிசம்பர் 25ஆம் தேதி ஒரு கட்டமாக போராட்டம் நடைபெற்ற நிலையில், டிசம்பர் 31 அன்று இதை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் வேலைச் சூழல் மற்றும் ஊதிய முறைகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
34
புத்தாண்டு டெலிவரி பிரச்சனை
தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் கடைசி நேர டெலிவரி அழுத்தம் காரணமாக அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூ ஐயர் ஈவ் போன்ற நாட்களில் பணிச்சுமை பல மடங்கு அதிகரிப்பதாகவும், அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படையான மற்றும் நியாயமான ஊதிய முறை, 10 நிமிட டெலிவரி போன்ற ஆபத்தான நடைமுறைகளை ரத்து செய்தல், காரணமில்லாத ஐடி பிளாக் மற்றும் அபராத விதிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு உபகரணங்கள், நிரந்தர வேலை வாய்ப்பு, மரியாதையான நடத்தல், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஓய்வு நேரம், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல நலத்திட்டங்களையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.