வீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்த வட்டி.. நிறைவேறும் வீட்டுக் கனவு.!

Published : Dec 28, 2025, 07:52 AM IST

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஸ்டேட் வங்கியை விடக் குறைவான 7.15% வட்டியில் புதிய வீட்டுக் கடன்களை அறிவித்துள்ளது.

PREV
14
வீட்டுக் கடன் வட்டி

இந்தியாவில் வீடு வாங்க திட்டமிடும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 5, 2025 அன்று ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளன. இதனால், முன்பு சுமார் 9% வரை இருந்த வீட்டுக் கடன் வட்டி, தற்போது பெரும்பாலான வங்கிகளில் 8% அளவுக்கு இறங்கியுள்ளது. இந்த மாற்றம், நடுத்தர வர்க்க மக்களுக்கு முதல் வீடு வாங்குபவர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

24
ஆர்பிஐ ரெப்போ விகிதம்

இந்த நிலையில், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் மற்ற வங்கிகளை விட ஒரு படி முன்னேறியுள்ளது. இந்த நிறுவனம் 7.15% முதல் புதிய வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. இந்த குறைந்த வட்டி விகிதம் டிசம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆர்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகிதத்தை 5.25% ஆகக் குறைத்ததன் விளைவாக, கடன் செலவுகள் குறைந்து, வீட்டு கடன் இஎம்ஐயில் நேரடி சலுகை கிடைக்கிறது.

34
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் 7.15% வட்டி விகிதம், 825க்கும் மேற்பட்ட சிபில் ஸ்கோர் கொண்ட வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். இந்த வட்டி விகிதம் ரூ.5 கோடி வரை உள்ள வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தையில் வாங்கும் திறன் சில அளவில் குறைந்திருந்தாலும், குறைந்த வட்டி விகிதம் காரணமாக வீடு வாங்கும் முடிவை எடுக்க பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலிவு விலை வீடுகளின் தேவை மேலும் அதிகரிக்கலாம்.

44
எஸ்பிஐ வீட்டுக் கடன்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது 7.25% முதல் புதிய வீட்டுக் கடன்களை வழங்குகிறது. இந்த விகிதம் டிசம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், எல்ஐசி வழங்கும் வட்டி விகிதம் எஸ்பிஐஐ விட 0.10% குறைவாக உள்ளது, நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு எல்ஐசி ஒரு சிறந்த மற்றும் மலிவான தேர்வாக மாறியுள்ளது. தனியார் மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ​​குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குவதால் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் கவனம் செலுத்தப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories