2026 ஜனவரி 1 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ABS கட்டாயம், BIS சான்றளிக்கப்பட்ட இரண்டு ஹெல்மெட்கள் இருக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை உரிமம் இடைநிறுத்தம்.
இந்திய அரசாங்கம் 2026 ஜனவரி 1 முதல் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) கட்டாயமாக புதிய விதிகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்விதிகளின்படி, எந்த எஞ்சின் அளவு கொண்ட வாகனமாயினும் ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம் (ABS) இருப்பது அவசியம். இதனை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
ரூ.2000 அபராதம் விதிப்பு! வாகன உரிமம் ரத்து!
BIS சான்றளிக்கப்பட்ட இரண்டு ஹெல்மெட்கள் ஒவ்வொரு வாகனத்திலும் இருக்க வேண்டும். ஓட்டுநரும் பின்செய்யும் பயணியும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை வாகன உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும்.
34
விபத்தை தடுக்க நடவடிக்கை
அரசு தரப்பில் வெளியான தகவலின்படி, சாலை விபத்துகளில் 40% பைக்குகள் காரணமாக ஏற்படுகின்றன. இதை குறைத்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்விதிகள் கடுமையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
புதிய விதிகள் குறித்து மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமம் நிறுத்தம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் முன்கூட்டியே அவசியமான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.