இப்போது நடைமுறையில், மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மீட்டர் வாசிப்பை பதிவு செய்து, அதை கணினி முறையில் பதிவேற்றுகின்றனர். பதிவேற்றப்பட்ட உடன் அந்த தொகை நேரடியாக நுகர்வோரின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. தவறாக இருந்தாலும், முதலில் அந்த தொகையை கட்டியே ஆக வேண்டும். பிறகு தான் புகார் அளித்து, ஆய்வுக்குப் பிறகு அடுத்த பில்லில் ஈடு செய்யப்படும். இந்த இடைவெளியில், பொதுமக்கள் தேவையில்லாத நிதிச்சுமையைச் சந்திக்க வேண்டி வந்தது.
புதிய முறை – தவறான பில்களுக்கு முன்கூட்டியே தடுப்பு
இந்த சிக்கலைத் தீர்க்க, மின் வாரியம் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படை நோக்கம் – குறைந்த மின் பயன்பாடு உள்ள வீடுகளில் திடீரென அதிக கட்டணம் வருவதை முன்கூட்டியே தடுக்க செய்வதாகும். புதிய முறையில், கடந்த கால பில் வரலாற்று தரவுகள் கணினியில் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு வீடுக்கு மாதந்தோறும் ரூ.1,200 கட்டணம் வந்தால், திடீரென ரூ.10,000 என்று பதிவானால், அந்த தரவு கணினியில் பதிவாகாமல் தடுக்கப்படும்.