மனைவி பெயரில் ரூ.5,000 முதலீடு செய்யுங்க! நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

First Published | Oct 7, 2024, 9:18 AM IST

மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வெறும் 1,000 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். வசதிக்கேற்ப மாதம்தோறும் அல்லது வருடம்தோறும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

National Pension System

ஒவ்வொருவரும் எதிர்காலம் குறித்து திட்டமிடுகிறார்கள். தங்கள் ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் அளிக்கும் திட்டத்தையும் தேடுகிறார்கள். மனைவி பெயரில் முதலீடு செய்வது இதற்கு சரியான தீர்வாக இருக்கும். இந்த ஸ்பெஷல் அக்கவுண்ட்டை மனைவி பெயரில் திறக்க வேண்டும்.

National Pension Scheme

தேசிய ஓய்வூதிய அமைப்பு அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மனைவிக்கு 60 வயது ஆகும்போது பெரிய தொகை ஒன்றை வழங்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமும் பெறுலாம். NPS கணக்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். இதனால் முதுமையில் பணம் குறித்த டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

Latest Videos


NPS investment

புதிய ஓய்வூதிய முறை (தேசிய ஓய்வூதிய திட்டம்) கணக்கைத் தொடங்கியதும், வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் 1,000 ரூபாயில் மனைவி பெயரில் NPS கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு முதலீட்டாளருக்கு 60 வயது ஆகும்போது முதிர்ச்சியடைகிறது. புதிய விதிகளின்படி, இந்தக் கணக்கை 65 வயதுவரை NPS கணக்கைத் தொடரலாம்.

Invest in Wife's account

உங்கள் மனைவிக்கு இப்போது 30 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 60,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இவ்வாறு தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு செய்தால், ஒட்டுமொத்த முதலீடு ரூ.18 லட்சமாக இருக்கும். 60 வயதில் ஓய்வு பெறும்போது உங்களிடம் ரூ.1,76,49,569 இருக்கும். சராசரி வட்டி 12 சதவீதமாக வைத்துக்கொண்டால், வட்டி மட்டும் ரூ.1,05,89,741 ஆகும்.

Pension planning

உங்கள் மனைவியின் கணக்கு 60 வயதில் முதிர்ச்சியடையும் போது, ​​மொத்தமாக ரூ.1,05,89,741 கிடைக்கும். வட்டி மூலம் சம்பாதித்த பணம்தான் இது. மீதமுள்ள 70,59,828 ரூபாய் தொடர்ந்து முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டுத்தொகை குறைந்தபட்சம் 40 சதவீதமாக இருக்கும். இதற்கு சராசரியான வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதமாக இருக்கும். அப்படியானால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.47,066 கிடைக்கும்.

NPS benefits

NPS என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தப் பொறுப்பை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. எனவே, NPS முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பணத்திற்கு, திட்டவட்டமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று கூறமுடியாது. ஆனால், NPS முதலீட்டுக்கு தொடக்கத்திலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 10 முதல் 12 சதவிகிதம் வரை வட்டி கிடைத்துள்ளது.

click me!