மகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை, இந்த கணக்கை பெற்றோர் மட்டுமே நிர்வகிக்க முடியும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண் குழந்தையே இந்தக் கணக்கை நிர்வகிக்க முடியும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்குவது எப்படி?
உங்கள் பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கைத் தொடங்க விரும்பினால், உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கோ அல்லது இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு வங்கிக்கோ நீங்கள் எளிதாகச் செல்லலாம். கணக்கைத் தொடங்கும் போது, உங்களைப் பற்றியும் உங்கள் பெண் குழந்தை பற்றியும் சில முக்கியமான தகவல்களை வழங்க வேண்டும் மற்றும் சில ஆவணங்களைச் சமர்ப்பித்தால் எளிதில் கணக்கு தொடங்க முடியும்.