Published : Oct 06, 2024, 11:02 AM ISTUpdated : Oct 06, 2024, 11:32 AM IST
தங்கம் வாங்கும்போது அது அசல் தங்கம்தானா என்பதை சரிபார்க்க வேண்டும். அப்போது வாடிக்கையாளர்கள் தூய தங்கத்துக்கான மூன்று அடையாளங்களை கவனிக்கவேண்டும். இந்த அறிகுறிகள் தங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை உறுதி செய்பவை.
பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் உண்மையான தங்கத்தையும் போலியையும் எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்வது அவசியம். மிக எளிதாகவே தூய தங்கத்தை அடையாளம் காணலாம். அதற்கு கவனிக்கவேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகள் உள்ளன.
27
Tips to check the purity of gold
தங்கத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் ஒரு சான்றிதழ் அமைப்பு ஹால்மார்க்கிங். உங்கள் தங்க நகைகளின் தூய்மை மற்றும் ஹால்மார்க்கிங்கில் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று பார்ப்போம். இதன் மூலம் சரியான தங்கத்தை நம்பிக்கையுடன் வாங்கலாம்.
37
What is Gold Hallmarking?
தங்க ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்குச் சான்றளிக்கும் அதிகாரபூர்வ அமைப்பாகும். இந்தியாவில், தங்க நகைகளை வாங்குபவர்களுக்குத் தரமான தங்கம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தங்க நகைகளை ஹால்மார்க் சான்றினை வழங்கும் நிறுவனம் இந்திய தரநிலைகளின் பணியகம் (BIS).
47
Purity of Gold Jewellery
தங்க நகைகளின் தூய்மையை எவ்வாறு சரிபார்க்கலாம்? தங்க நகைகளின் ஹால்மார்க்கிங்கைச் சரிபார்க்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் நீங்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையைக் குறிக்கின்றன.
57
BIS Standard Mark
BIS லோகோ: பார்க்க வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான அடையாளம் BIS லோகோ தான். தங்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது என்பதையும் தூய தங்கத்தின் தன்மை முழுமையாக இருக்கிறது என்பதையும் குறிப்பது இந்த BIS லோகோ. இந்த லோகோ பொதுவாக முக்கோணக் குறியீடாக இருக்கும். அதன் அடியில் "BIS" என்ற எழுத்துகள் இருக்கும். இது தங்கம் சரியான தர சோதனைகள் மூலம் சரிபார்க்கப்பட்டது என்று உறுதி செய்கிறது. இதனால், அதன் தூய்மைத் தன்மையை நம்பலாம்.
67
Purity Grade in Karat
எத்தனை காரட்?: காரட் அளவைக் கொண்டு தூய்மையின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். இது தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதைக் குறிக்கும். உதாரணமாக, 22 காரட் தங்கம் (916) என்றால் 91.6% தூய தங்கத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான தங்க நகைகள் இந்தத் தரநிலையிலேயே இருக்கின்றன. 18 காரட் தங்கம் (750) 75% தூய தங்கத்தை குறிக்கிறது. 14K காரட் தங்கம் (585) 58.5% தங்கத்தைக் குறிக்கும்.
இந்த எண்கள் நகைகளில் உள்ள தூய தங்கத்தின் சதவீதத்தை ஒத்திருக்கும். காரட் குறியீடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தங்கம் தூய்மையானது.
77
Jeweller’s Identification Mark
நகை வியாபாரிகளின் அடையாளக் குறியீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையம்: நகைக்கடைகளின் அடையாளக் குறியீடு மற்றும் மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் (AHC) லோகோ ஆகியவை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். BIS சான்று பெற்ற எல்லா நகைக்கடைகளுக்கும் ஒரு தனித்துவமான அடையாளக் குறியீடு இருக்கும். இந்தக் குறியீடு தங்க நகை எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய உதவும். ஹால்மார்க்கிங் மையத்தின் லோகோ, தங்கம் தூய்மை சரிபார்ப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டு குறியீடுகளும் தங்கம் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.