பெர்சனல் லோன் உடனே ஓகே ஆகணுமா? இதெல்லாம் கரெக்டா வச்சுக்கோங்க!

First Published | Oct 6, 2024, 9:51 AM IST

பண நெருக்கடியின் போது விரைவாகக் கிடைக்கும் தனிநபர் கடன் பெரிய உதவியாக இருக்கும். டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களின் மூலம் பெர்சனல் லோன் வாங்குவது எளிதாக மாறிவிட்டது. சில கடன் வழங்குநர்கள் உடனடியாக வங்கிக் கணக்குகளில் கடன் தொகையைச் செலுத்துகிறார்கள்.

Personal Loan Tips

பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனுக்கான ஒப்புதலுக்கு, நீங்கள் பிணை அல்லது பாதுகாப்பை வழங்க வேண்டியதில்லை. தனிபர் கடன்கள் நெகிழ்வானவை, எந்தவொரு தனிப்பட்ட நிதித் தேவைக்கும் இதனை பயன்படுத்தப்படலாம். மருத்துவ செலவு, விடுமுறை நாள் சுற்றுலாச் செலவு, விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதற்கு என எதற்கும் இந்தக் கடனை பயன்படுத்திக்கொள்ளலாம். கடன் வழங்கும் நிறுவனம் விதிமுறைகளைப் பொறுத்து, ரூ.5,000 முதல் ரூ.50 லட்சம் வரை லோன் கிடைக்கும்.

Digital Personal Loan Lenders

பல டிஜிட்டல் தளங்கள் குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணத்தில் காகிதப் பயன்பாடு இல்லாத மற்றும் விரைவான தனிநபர் கடன்களை வழங்குகின்றன. இதுபோன்ற உடனடி தனிநபர் கடனைப் பெறுவது வங்கிக் கணக்கின் கிரெடிட் ஸ்கோர், ஆண்டு வருமானம் மற்றும் இதற்கு முன் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திய வரலாறு ஆகிய மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்தது.

Tap to resize

Quick Personal Loan

விரைவான தனிநபர் கடன் ஒப்புதலை வழங்கும் வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். சில தளங்கள் குறைந்தபட்ச ஆவணங்களை மட்டும் பெற்று, விரைவாக கடன்களை விநியோகிக்கின்றன.

Best credit score for Personal loan

நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராகவோ அல்லது நிலையான வருமானத்துடன் சுயதொழில் செய்பவராகவோ இருக்க வேண்டும். கூடுதலாக, நல்ல கிரெடிட் ஸ்கோர் (700 அல்லது அதற்கு மேல்) இருந்தால், தனிநபர் கடனுக்கு ஒப்புதல் கிடைக்க ஆகும் நேரத்தைக் குறைக்கலாம்.
 

Digital Verification for Personal Loan

முழுமையான டிஜிட்டல் செயல்முறையைத் தேர்ந்தெடுப்பது உடனடி கடன்களைப் பெற சரியான வழி. இந்த முறையில் தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். சரிபார்ப்புக்குப் பின் தனிநபர் கடன் ஒப்புதல் வழங்கப்படும். இந்த முறையில் ஆவண சரிபார்ப்பு நேரம் விரைவுபடுத்தப்படும். அதன் மூலம் தனிநபர் கடன் ஒப்புதலுக்கான நேரமும் கணிசமாகக் குறையும்.

Personal loan KYC

பல ஆன்லைன் தளங்கள் உடனடி KYC சரிபார்ப்பு வசதியை வழங்குகின்றன. KYC சரிபார்ப்பை முடித்த பிறகு, கடனுக்கான EMI திருப்பிச் செலுத்துவதற்கான அட்டவணையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டவுடன், கடன் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Latest Videos

click me!