Government Employees: அரசு ஊழியர்களுக்கு 6,000 ரூபாய் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா? வெளியான அறிவிப்பு

First Published | Oct 6, 2024, 7:50 AM IST

Government Employees Salary Hike: நீண்ட நாட்களாகவே அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்து காத்திருந்த மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக  6,000 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலமான துர்கா பூஜைக்கு முன்னதாக சூப்பர் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த முறை அரசு ஊழியர்களே எதிர்பாராத வகையில் ஒரே அடியாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் தொடர் விடுமுறை என்ற மகிழ்ச்சியில் இருந்து வரும் அரசு ஊழியர்களுக்கு  சம்பளமும் உயர்வு என்ற அறிவிப்பு இரண்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

ஆனால் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தி அல்ல. ஏனெனில் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

கன்னியாஷ்ரீ அல்லது ரூப்ஷ்ரீ திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு தரப்பில் இது தொடர்பாக அதிகரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியான அறிவிப்பின் கீழ் வராத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் உயர்த்தப்படும் என ஒரு அறிவிப்பின்படி தெரியவந்துள்ளது.

கன்னியாஷ்ரீ திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர், தரவு மேனேஜர் மற்றும் கணக்காளர் மற்றும் தரவு மேலாளர், ரூப்ஷ்ரீ திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர் மற்றும் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

கன்னியாஷ்ரீ திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர்களின் மாத குறைந்தபட்ச சம்பளம் 6,000 ரூபாய் உயர்த்தப்பட்டு 21,000 ரூபாயாகவும், தரவு மேலாளர்களின் சம்பளம் 5,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூப்ஷ்ரீ திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர்களின் சம்பளம் 6,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூப்ஷ்ரீ திட்டத்தின் கீழ் பணியாற்றும் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்களின் மாத சம்பளம் 5,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Latest Videos

click me!