மாதம் ரூ.3,000 முதலீடு செய்தால், ரூ.1.5 கோடி கிடைக்கும்.. எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..

First Published | Jul 30, 2024, 6:25 PM IST

SIPயில் ஒவ்வொரு மாதம் அல்லது வாரம் அல்லது குறிப்பிட்ட வார இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதன்படி ரூ.3000 முதலீடு செய்தால் உங்களுக்கு ஓய்வு காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Investment

மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது ஒரு முதலீட்டு முறையாகும். மிகப்பெரும் தொகையை உருவாக்கவும், கூட்டுத் தாக்கத்துடன் அதிக வருமானம் சேர்க்கவும் உதவும் சிறந்த வழியாகும். SIPயில் ஒவ்வொரு மாதம் அல்லது வாரம் அல்லது குறிப்பிட்ட வார இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். SIP முதலீடுகள் லாபகரமாக இருந்தாலும், சரியான நிதியைக் கண்டுபிடித்து நீண்ட கால முதலீட்டில் ஈடுபடுவது முக்கியம். 

Investment

SIP முதலீட்டுக்கு கூட்டு வட்டி முறையில் லாபம் கிடைக்கிறது. அதாவது நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வட்டி கிடைக்கும், அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். ஒருவர் தனது 20 வயதில் SIPயில் ரூ. 1000, 30 வயதில் ரூ.3,000, 40 வயதில் ரூ.4,000 முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதிற்குள் கோடீஸ்வரராகலாம்.

Latest Videos


SIP Investment

உதாரணத்திற்கு, 12% வருடாந்திர வருமானம் என்ற விகிதத்தில் ஒருவர் 40 ஆண்டுகளுக்கு ரூ. 1000 முதலீடு செய்தால் க்கான அவர் 60 வயதில் ரூ.1.19 கோடி பெறலாம். இந்த மாதாந்திர SIP தொகையை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்தால் கூட்டு வட்டி மூலம் உங்கள் தொகை ரூ.3.5 கோடியாக உயரும். 

SIP Investment

அதே போல் ரூ.3000 தொகையை 30 ஆண்டுகளுக்கு SIPயில் முதலீடு செய்தால் உங்களுக்கு முதிர்வு காலத்தில் 1.05 கோடியை பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை 10% உயர்த்தினால், மொத்த தொகை ரூ.2.65 கோடியாக உயரும்..

SIP Investment

அதே போல் நீங்கள் 40 வயதில் உங்கள் SIP ஐத் தொடங்கி,  மாதம் ரூ.3000 முதலீடு செய்தால் 12% முதலீட்டில் வருடாந்திர வருமானத்துடன் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் நீங்கள் 40 லட்ச ரூபாய் உருவாக்கலாம்.. ஒவ்வொரு ஆண்டும் இந்த பங்களிப்பு 10% உயர்த்தப்பட்டால், இந்த தொகை சுமார் 80 லட்சத்தை எட்டும்.

SIP Investment

SIPயில் எவ்வளவு முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள SIP கால்குலேட்டர்கள் இருக்கின்றன. இந்த கால்குலேட்டர்களை பயன்படுத்தி நீங்கள் முதலீடு செய்யும் தொகை, ஆண்டு வருமானம் சதவீதம், எத்தனை ஆண்டுகள் முதலீடு போன்ற விவரங்களை பதிவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும். 

SIP Investment

எனினும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால் எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரை ஆலோசனை செய்து அதன்பின்னர் முதலீடு செய்வது நல்லது. 

click me!