இந்திய பெரும் பணக்காரர்களின் புதிய திருமண இடமாக உள்ள Jio World Garden : அதன் தினசரி வாடகை எவ்வளவு?

First Published | Nov 15, 2023, 11:30 AM IST

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு கார்டன் (Jio World Garden), மும்பையில் உள்ள பணக்காரர்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஜியோ கார்டன் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது

Jio World Garden

முகேஷ் அம்பானி 90 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய  பெரும் பணக்காரர் ஆவார். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானி தலைமை தாங்குகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரின் கீழ் உள்ள பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றன.

Jio world centre

இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு கார்டன் (Jio World Garden), மும்பையில் உள்ள பணக்காரர்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஜியோ கார்டன் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது. இந்த ஆடம்பரமான தோட்டத்தில் தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் ஆடம்பர விழாவில் திருமணம் நடைபெற்றது.

Latest Videos


Jio world centre

கடந்த மார்ச் 6-ம் தேதி, ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருபாய் அம்பானி சதுக்கத்தை நிதா அம்பானி திறந்து வைத்தார். ஜியோ வேர்ல்ட் கார்டன் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ளது. ஐந்து லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இது இந்தியாவின் மிகப்பெரிய மாநாட்டு மையமாகும். ஜியோ பார்க் அனைத்து தேவையான வசதிகளுடன் கூடிய சொகுசு இடமாக உள்ளது.

Jio World Garden

இந்த பூங்காவில் ஒரு சர்வதேச மாநாட்டு மையம், ஹோட்டல்கள், ஒரு சொகுசு மால் உட்பட இரண்டு மால்கள், ஒரு கலை அரங்கம் மற்றும் ஒரு டிரைவ்-இன் திரைப்பட தியேட்டர் மற்றும் வணிக அலுவலகங்கள் இருக்கும் என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

Jio World Garden

ஜியோ வேர்ல்ட் சென்டரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, முழு பூங்காவும் வைஃபை இயக்கப்பட்டது. பூங்காவில் ஒரே நேரத்தில் 2,000 கார்கள் மற்றும் SUV கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளது.

jio world centre

இந்த ஜியோ வேர்ல்ட் கார்டனின் ஒரு நாள் வாடகை செலவு ரூ.15 லட்சம். இருக்கிறது நிகழ்ச்சி இல்லாத நாட்களில் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் செலுத்தி இந்த தோட்டத்தை மக்கள் பார்வையிடலாம்.

jio

இந்த ஜியோ வேர்ல்ட் கார்டனின் ஒரு நாள் வாடகை செலவு ரூ.15 லட்சம் ஆகும். எனினும். நிகழ்ச்சி இல்லாத நாட்களில் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் செலுத்தி இந்த தோட்டத்தை மக்கள் பார்வையிடலாம்.

click me!