தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறீங்களா? டிஜிட்டல் கோல்டு ஆஃபரைப் பாத்துட்டு பர்சேஸ் பண்ணுங்க!

First Published | Nov 11, 2023, 8:56 PM IST

தீபாவளியன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் தீபாவளி பண்டிகை நாளில் நகை விற்பனை மிகப்பெரிய அளவில் நடக்கிறது. நீங்களும் இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், நகைக் கடைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள், சலுகைகள் உள்ளன. டிஜிட்டல் தங்கத்தை 100 ரூபாய்க்குக்கூட வாங்க முடியும்.

Paytm

Paytm பயனர்கள் ஆன்லைனில் தங்கம் வாங்க, விற்கவும் பரிசளிக்கவும் வசதியை அளிக்கிறது. ஒரு ரூபாய் முதல் ரூ.1,99,000 வரையிலும் தங்கத்தை வாங்கலாம். இந்தச் சேவை MMTC-PAMP மூலம் நிர்வகிக்கப்படுகிறது. www.paytm.com/digitalgold என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். Paytm செயலியில் 'gold' எனத் தேடவும்.

Google Pay

Google Pay செயலியில் பிரத்யேக தங்க லாக்கர் பிரிவு இருக்கிறது. இதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும் விற்கவும் முடியும். இந்தச் சேவை MMTC-PAMP மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

Latest Videos


Tanishq

டாடாவின் தனிஷ்க், சேஃப் கோல்ட் (SafeGold) உடன் இணைந்து தங்கத்தை வாங்க, விற்க உதவுகிறது. இதில், டிஜிட்டல் தங்கத்தை 100 ரூபாய்க்கு வாங்கலாம். இதுபற்றி மேலும் அறிய https://www.tanishq.co.in/digigold/buy ஐப் பார்வையிடலாம்.

SafeGold

SafeGold என்பது மற்றொரு டிஜிட்டல் தங்க விற்பனை தளமாகும். இந்த் தளமும் வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்க, விற்க வசதி அளிக்கிறது.

MMTC-PAMP

எம்எம்டிசி-பிஏஎம்பி (MMTC-PAMP) என்பது டிஜிட்டல் தங்கம் வாங்கவும், விற்கவும் பயன்படுவது மட்டுமின்றி, பல ஆன்லைன் தளங்கள் இந்தச் சேவையை வழங்க அனுமதிக்கிறது. இதைப்பற்றி மேலும் அறிய https://www.mmtcpamp.com/digital-gold என்ற இணைய முகவரியைப் பார்வையிடவும்.

PhonePe

PhonePe மொபைல் அப்ளிகேஷன் மூலமும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். இதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை 10 ரூபாய் முதல் வாங்கலாம். இந்தச் சேவையும் MMTC-PAMP மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

Airtel Payments Bank

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியும் சேஃப்கோல்டு (SafeGold) உடன் இணைந்து DigiGold சேவையைக் கொடுக்கிறது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலி மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை விற்கவும் பரிசளிக்கவும் முடியும்.

BharatPe

பாரத் பே (BharatPe) பேமெண்ட் அப்ளிகேஷன் சேஃப் கோல்டு (SafeGold) உடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் ஆப்ஷனை வழங்கிவருகிறது. பாரத் பே செயலி மூலம் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கும் வாங்கலாம்.

Big Basket

டாடா குழுமத்திற்கு சொந்தமான பிக் பாஸ்கெட் (Big Basket) செயலிலும் தனிஷ்க் தங்க நாணயங்களை வாங்குவதற்கான தந்தேராஸ் ஸ்டோர் ((Dhanteras Store) உள்ளது.

Myntra, Zepto, Blinkit

ஆன்லைன் ஃபேஷன் தளமான மைந்த்ரா (Myntra), மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் Zepto, உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ(Zomato) வுக்குச் சொந்தமான Blinkit போன்ற இன்னும் பல தளங்கள் மூலமும் டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க நாணயங்களை வாங்க முடியும்.

click me!