ஆதார் கார்டு பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? ஈசியான வழி இதோ...

First Published | Oct 25, 2023, 3:44 PM IST

ஆதார் அட்டையை வைத்திருக்கும் எவரும் பாதுகாப்புக்காக தங்கள் பயோமெட்ரிக் தகவல்களை தற்காலிகமாக லாக் செய்து வைக்கலாம். இதன் மூலம் மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

Lock or Unlock Your Aadhaar Biometrics

அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவது வரை, ஒரு நபரின் அடையாளத்தைச் சரிபார்க்கும் செயல்முறையை ஆதார் அட்டை எளிதாக்குகிறது. இது ஆதார் ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க ஆதார் எண்ணைக் கொண்டது.

How to lock Aadhaar Biometrics

ஆதார் அட்டையில், கைரேகைகள், கருவிழி மற்றும் முகப் படங்கள் போன்ற பயோமெட்ரிக்ஸ் முக்கியமான தனிப்பட்ட தகவல்களும் இருக்கும். இப்போது, தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆதார் அட்டையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை, குறிப்பாக பயோமெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்வது முக்கியம்.

Latest Videos


Aadhaar Biometrics

சைபர் கிரைமினல்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் பயோமெட்ரிக் விவரங்களை தவறாகப் பயன்படுத்தி, மோசடி வேலைகளில் ஈடுபடலாம். இதைத் தவிர்க்க ஆதார் ஆணையம் ஒரு பயனுள்ள வசதியை வழங்குகிறது. பயோமெட்ரிக் விவரங்களை பாதுகாப்பாக லாக் செய்து வைக்கும் வசதிதான் அது.

Aadhaar Biometrics Data safety

ஆதார் அட்டையை வைத்திருக்கும் எவரும் தங்கள் பயோமெட்ரிக் தகவல்களை தற்காலிகமாக லாக் செய்து வைக்கலாம். பின் லாக்கை அகற்றி திறக்கவும் செய்யலாம். இந்த வசதியைக் கொண்டு ஆதார் ஆணையம் தனிநபர் பயோமெட்ரிக் விவரங்களின் ரகசியத்தன்மையை உறுதி செய்கிறது.

Lock Biometric data

பயோமெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்பட்ட பின்பு, ஆதார் அட்டை வைத்திருப்பவர் அடையாள சரிபார்ப்புக்காக ஆதார் பயோமெட்ரிக் பதிவை பயன்படுத்த முடியாது. பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட நிலையில் ஆதாரை அடையாளச் சரிபார்ப்புக்கு பயன்படுத்த முயற்சி செய்தால், Error 330 என்ற செய்தி வரும். இது பயோமெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

Aadhaar Biometrics misuse

ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் லாக் செய்வது எப்படி?

1. ஆதார் ஆணையத்தின் (UIDAI) https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று My Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்

2. Aadhaar Services என்பதைத் தேர்ந்தெடுத்து, பின் Secure your Biometrics என்பதை கிளிக் செய்யவும்.

3. Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக் செய்து, உங்களின் 12 இலக்க  ஆதார் எண்ணையும் Capcha குறியீட்டையும் உரிய இடத்தில் டைப் செய்து சமர்ப்பிக்கவும்.

4. ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ அதற்கான இடத்தில் டைப் செய்யவும்.

5. பின், திரையில் இருக்கும் Lock / Unlock Biometrics என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

click me!