ஜோமேட்டோவுடன் கைகோர்த்த ரயில்வே! பயணிகளுக்கு நவராத்திரி ஸ்பெஷல் மெனு ரெடி!

First Published | Oct 19, 2023, 2:29 PM IST

ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் ஐஆர்சிடிசி (IRCTC) உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோவுடன் இணைந்து ரயில் பயணிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

IRCTC - Zomato - Navratri thalis

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) உணவு விநியோக தளமான ஜோமேட்டோ (Zomato) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் இ-கேட்டரிங் பிரிவின் பலவிதமான உணவு வகைகளில் தங்களுக்கு விருப்பமான உணவைத் தேர்வு செய்யலாம்.

Zomato food delivery in trains

ஜொமேட்டோவுடனான இந்தக் கூட்டணி ரயில் பயணிகளுக்கு அதிக உணவு வகைகளை வழங்குவதற்கு வசதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் பயண அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் வசதியாகவும் மாற்றலாம் என்றும் ரயில்வே கருதுகிறது.

Latest Videos


Indian Railway

முதல் கட்டமாக புது தில்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த ரயில் நிலையங்களில் பயணிகள் Zomato உதவியுடன் IRCTC E-Catering போர்டல் வழியாக உணவு ஆர்டர் செய்யலாம்.

Zomato tie-up with IRCTC

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ரயில்வே கேட்டரிங் சேவை பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. நவராத்தி விரதம் இருக்கும் பயணிகளின் சிறப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு ஐஆர்சிடிசி கேட்டரிங் பிரிவு சிறப்பு நவராத்திரி உணவுகளை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

IRCTC food via Zomato

இந்தியன் ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் ஒப்பந்தம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அக்டோபர் 18ஆம் தேதி காலை ஜோமேட்டோ (Zomato) நிறுவனத்தின் பங்கு விலை ரூ.115 ஆக உயர்ந்தது. இது கடந்த கடந்த 52 வாரங்களில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!