ஒருவழியாக ஆனந்த் அம்பானியின் திருமண தேதியை அறிவித்தார் முகேஷ் அம்பானி..! எப்போது தெரியுமா?

First Published | Oct 3, 2023, 12:13 PM IST

முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண தேதியை வெளியிட்டுள்ளார். அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்போது? இதோ விவரம்...

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும் ராதிகாவும் ஆனந்தும் அம்பானி இல்லமான ஆண்டிலியாவில் தங்கள் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் படி, ஜனவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அப்போதிருந்து, இந்த ஜோடி பல்வேறு பொது நிகழ்வுகளில் அடிக்கடி ஒன்றாகக் காணப்பட்டது. குறிப்பாக திருமணத்திற்கு முன் ராதிகா தனது மாமியார் நீதா அம்பானியுடன் ஒரு அற்புதமான பந்தத்தை பகிர்ந்து கொண்டார்.

Tap to resize

மேலும் விநாயக சதுர்த்தி பண்டிகையின் போது ஆனந்த் அம்பானியின் குடும்பத்தினருடன் ராதிகா மெர்ச்சன்ட்  இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க:  ரோல்ஸ் ராய்ஸ் மீது தீரா காதல் - சாமி தரிசனம் செய்ய 14 கோடி ரூபாய் கார் - மாஸாக வந்து இறங்கிய அனந்த் அம்பானி!

ஆனந்த் மற்றும் ராதிகாவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களது திருமண செய்தியை அறிய ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண தேதி தற்போது வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமண தேதியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

2024 ஆம் ஆண்டு ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான திருமண விழாவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க:  அம்பானி வீட்டு பார்ட்டியில் டிஷ்யூ பேப்பராக ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா.. அடேங்கப்பா.!!

நிச்சயதார்த்தத்திற்கு, ராதிகா ஏஸ் டிசைனர் அபு ஜானி சந்தீப் கோஸ்லாவின் தங்க நிற லெஹங்காவில் அழகாக இருந்தார். அதற்கு ஏற்ற துப்பட்டா அணிந்திருந்தார்.

இடுப்பில் மெல்லிய தங்க பெல்ட் அணிந்து, ஸ்டேட்மென்ட் டைமண்ட் நெக்லஸ், அதற்கு ஏற்ற காதணிகள், வளையல் ஆகியவற்றை அணிந்து ராதிகா தேவதை போல் ஜொலித்தார். மறுபுறம், ஆனந்த் நீல நிற குர்தா-பைஜாமா மற்றும் அதற்கு ஏற்றார் போல் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

Latest Videos

click me!