நீல கலர் ஆதார் அட்டை தெரியுமா? இந்த கார்டு யாருக்கு வழங்கப்படும்? விண்ணப்பிப்பது எப்படி?

Published : Oct 21, 2023, 12:52 PM ISTUpdated : Oct 21, 2023, 12:56 PM IST

நீல ஆதார் அட்டை என்றால் என்ன? நீல நிற ஆதார் அட்டைக்கும் சாதாராண ஆதார் அட்டைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என இந்தச் செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

PREV
14
நீல கலர் ஆதார் அட்டை தெரியுமா? இந்த கார்டு யாருக்கு வழங்கப்படும்? விண்ணப்பிப்பது எப்படி?
Blue Aadhaar card for children

இந்தியாவில் அரசு மானியங்கள் மற்றும் அரசு நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட குடிமக்கள் பற்றிய முக்கியத் தகவல்கள் இருப்பதால், இது பல்வேறு தேவைகளுக்கு முக்கியமான அடையாளச் சரிபார்ப்பு ஆவணமாகக் கருதப்படுகிறது.

24
What is Blue Aadhaar card

தனித்துவமான 12-இலக்க எண்ணைக் கொண்ட ஆதார் அட்டை ஆதார் ஆணையம் (UIDAI) மூலம் வழங்கப்படும். ஆதார் ஆணையம் 2018 இல் நீல ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

34
Aadhaar Card for Children

அரசின் நலத் திட்டங்களில் சிறு குழந்தைகளைச் சேர்ப்பதில் நீல நிற ஆதார் அட்டை மிகவும் முக்கியமானது. இந்த ஆதார் அட்டையின் முக்கிய அம்சம் என்னவென்றால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்கத் தேவையில்லை. மாறாக, மக்கள்தொகை தரவு மற்றும் பெற்றோரின் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு நீல நிற ஆதார் அட்டையைப் பெறலாம்.

44
Aadhaar Card For Children Under 5 Years

நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், uidai.gov.in க்குச் சென்று நீல நிற ஆதார் பெற விண்ணப்பிக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி, பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின், அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லவும். ஆதார் மையத்தில் பெற்றோரின் ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories