டோல் பாக்கி இருந்தா முடிஞ்சுது.. டிரைவர்கள் அதிர்ச்சி.. அதிரடி ரூல்ஸ் வந்தாச்சு

Published : Jan 21, 2026, 09:34 AM IST

மத்திய அரசு டோல் கட்டண நிலுவையை வசூலிக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை டோல் வசூலை வலுப்படுத்தி, நெடுஞ்சாலை பராமரிப்புக்கு நிதி திரட்ட உதவும்.

PREV
14
டோல் கட்டணம் நிலுவை

உங்கள் வாகனத்தில் டோல் கட்டணம் நிலுவையில் இருந்தால், இனிமேல் முக்கியமான பல அரசுப் பணிகள் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வாகன ஓட்டுநர்களிடையே உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு டோல் வசூலை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை செலுத்தாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

24
புதிய விதிமுறைகள்

இந்த மாற்றம் மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்தம்) விதிகள், 2026 என்ற விதிமுறைகளின் மூலம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவானது: டோல் வசூலில் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புக்கான வளங்களை அதிகரித்தல். இதன் மூலம், டோல் தவிர்ப்பை கட்டுப்படுத்தி நிலுவை தொகையை கட்டாயமாக வசூலிக்க அரசு முயற்சி செய்கிறது.

34
டோல் நிலுவை விதிமுறை

புதிய விதிகளின்படி, ஒரு வாகனத்தில் டோல் கட்டணம் நிலுவையில் இருந்தால் அந்த வாகனத்திற்கு மாநில மாற்றத்துக்கான NOC வழங்கப்படாது. மேலும், Fitness Certificate renewal செய்யும் பணியும் நிறுத்தப்படலாம். அதுபோல, வணிக வாகனங்களுக்கு தேசிய அனுமதி பெறுவதும் தடையடையும். இதனால் தனிநபர் வாகனங்கள் மட்டும் அல்ல, சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களும் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

44
டோல் பிளாசா

மேலும், டோல் நிலுவை என்ற வரையறையும் மாற்றப்பட்டுள்ளது. ஒரு வாகனம் டோல் பிளாசாவை கடந்து சென்றபோது தொகை மின்னணு முறையில் பதிவு ஆகாமல் இருந்தால், அது செலுத்தப்படாத பயனர் கட்டணம் / டோல் பாக்கிகள் என கருதப்படும். இதேபோல், NOC பெற பயன்படும் படிவம்-28-ல் வாகனத்தில் டோல் நிலுவை உள்ளதா இல்லையா என்ற தகவல் கட்டாயமாக சேர்க்கப்பட உள்ளது. இந்த படிவத்தை ஆன்லைனிலும் நிரப்பலாம். எதிர்காலத்தில் தடையற்ற கட்டண அமைப்பு (MLFF) நடைமுறைக்கு வர இதுவே அடித்தளம் என்றும் அரசு விளக்குகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories