புதிய ஆண்டு முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்து வரலாறு காணாத உச்சமாக ரூ.1,11,200-க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,400 உயர்வு.
புதிய ஆண்டு பிறந்ததில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24
இந்நிலையில் இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,880க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை ரூ.1,280 கூடிய நிலையில் மாலை சவரனுக்கு ரூ.2,320 என ரூ.3,600 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.
34
அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.450 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை இப்படி உயர்ந்து வருகிறது என்று பார்த்தால் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை இன்று கிராம் ரூ.22 உயர்ந்து ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.340,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் இன்று 3400ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.