இந்திய தபால் நிலையத்தின் தொடர் வைப்பு (RD) திட்டம், மாதந்தோறும் சிறு தொகையை முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் பெற உதவுகிறது. தற்போது 6.7% வட்டி வழங்குகிறது இந்த திட்டம். இது உறுதியான வருமானம் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
இந்தியாவில் சேமிப்பு பழக்கத்தை வளர்க்கவும், எதிர்காலத் தேவைகளுக்கு பாதுகாப்பான நிதி உருவாக்கவும் விரும்புபவர்களுக்கு இந்திய தபால் நிலையம் (இந்திய அஞ்சல்) வழங்கும் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு (RD) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த திட்டம், மாதந்தோறும் சிறு தொகை முதலீடு செய்து, உறுதியான வருமானம் பெற உதவுகிறது. முக்கியமாக இது சந்தை நிலவரத்தை சார்ந்தது அல்ல என்பதால், பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாது.
24
தபால் நிலைய சேமிப்பு திட்டம்
போஸ்ட் ஆபிஸ் ஆர்டி என்பது மாதாந்திர சேமிப்பு திட்டம். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிரந்தர தொகையை செலுத்தி, 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) முதலீடு செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் வட்டி மூன்று மாதம் ஒரு முறை (காலாண்டு) சேர்க்கப்பட்ட கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் ரூ.100 முதல் முதலீட்டைத் தொடங்க முடியும். ரூ.10 மடங்குகளில் செலுத்தலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை என்பது இதன் மற்றொரு பலமாகும்.
34
2000 மாத சேமிப்பு
இந்த கணக்கை பெரியவர்கள் மட்டுமின்றி, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெயரிலேயே தொடங்கலாம். கூட்டு கணக்கு வசதியும் உள்ளது. பணம் செலுத்தும் முறையில், பணம், செக், ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. சேமிப்பு கணக்கை இணைத்தால், மாதந்தோறும் தொகை ஆட்டோ டெபிட் முறையில் செலுத்த வேண்டும்.
ரூ.2,000 மாதம் என்ற கணக்கில் 5 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்தமாக நீங்கள் செலுத்தும் தொகை ரூ.1,20,000 ஆகும். கணக்கீட்டின் அடிப்படையில், இந்த முதலீட்டிற்கு முதிர்ச்சியில் ரூ.1,42,732 வரை தொகை கிடைக்கும். அதாவது, உங்கள் சேமிப்புக்கு மேலாக சுமார் ரூ.22,732 வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. குறைந்த ஆபத்து மற்றும் நம்பகமான வருமானம் தேடும் குடும்பங்களுக்கு இது பயனுள்ள சேமிப்பு திட்டமாக பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.