காசுக்கு காசு.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு! சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை அளித்த தரும் வங்கிகள்!

Published : Jan 19, 2026, 06:42 PM IST

மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக லாபம் தரும் வகையில், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிஅகள் 7.50% வரை வட்டி வழங்குகின்றன. மேலும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் உண்டு. அதைத் திரும்பப் பெறவும் முடியும்.

PREV
14
பிக்சட் டெபாசிட் முதலீடு

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பான முதலீட்டுடன் நல்ல லாபத்தையும் தரும் நோக்கில் சில ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் (Small Finance Banks) கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அறிவித்துள்ளன.

24
அதிக வட்டி தரும் வங்கி

• உத்கர்ஷ் (Utkarsh), ஜனா (Jana) மற்றும் ஸ்லைஸ் (Slice) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்: இந்த மூன்று வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு சுமார் 7.50% வரை வட்டி வழங்குகின்றன. இது தற்போதைய சந்தையில் மிக உயர்ந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும்.

• சூர்யோதய் (Suryoday) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இங்கு 3 ஆண்டு கால வைப்பு நிதிக்கு சுமார் 7.25% வட்டி கிடைக்கிறது.

• உஜ்ஜீவன் (Ujjivan) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இந்த வங்கி சுமார் 7.20% வட்டியை வழங்குகிறது.

34
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி

• ஈக்விடாஸ் (Equitas) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: இங்கு சுமார் 7.10% வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாக மூத்த குடிமக்களுக்கு மற்றவர்களை விட 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

• ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் இவர்களுக்கு சுமார் 7.00% வட்டி கிடைக்கிறது.

• ஷிவாலிக் (Shivalik) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: வட இந்தியாவில் பிரபலமாகி வரும் இந்த வங்கி 6.75% வட்டி வழங்குகிறது.

44
FD வட்டிக்கு வரி (TDS) உண்டா?

ஒரு நிதியாண்டில் ஒரு வங்கியில் நீங்கள் பெறும் மொத்த வட்டித் தொகை ₹1 லட்சத்தைத் தாண்டினால், வங்கி அதிலிருந்து டிடிஎஸ் (TDS) வரி பிடித்தம் செய்யும்.

முக்கிய குறிப்பு: இது கூடுதல் வரி அல்ல. உங்கள் மொத்த வரிப் பொறுப்பில் இதைச் சரிசெய்து கொள்ளலாம் அல்லது வருமான வரி தாக்கல் (ITR) செய்யும்போது ரீஃபண்டாகப் (Refund) பெற்றுக்கொள்ளலாம். பல நேரங்களில் ரீஃபண்ட் தொகைக்கு வட்டியும் சேர்த்து வழங்கப்படுவது கூடுதல் லாபம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories