வருமான வரி ரீஃபண்ட் பணம் வரலையா? சிம்பிள்.. Status செக் பண்ணிட்டு இதை பண்ணுங்க!

Published : Jan 19, 2026, 03:46 PM IST

வருமான வரி ரீஃபண்ட் தாமதமானால், முதலில் அதன் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும். ஸ்டேட்டஸைப் பொறுத்து CPC அல்லது SBI-ஐ தொடர்புகொள்ளலாம் அல்லது ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

PREV
15
வருமான வரி ரீஃபண்ட்

வருமான வரி தாக்கல் செய்த பிறகு, ரீஃபண்ட் தொகை வங்கி கணக்கிற்கு வரும் வரை பலருக்கும் ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக வருமான வரித் துறை (CPC) இப்போது ரீஃபண்ட் பணிகளை வேகமாக முடித்தாலும், ஒருசில தொழில்நுட்பக் காரணங்களால் தாமதம் ஏற்படலாம். உங்கள் ரீஃபண்ட் பணம் இன்னும் வரவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியவை இதோ:

25
1. ரீஃபண்ட் நிலை (Status) என்ன?

முதலில் உங்கள் பணம் எங்கு தேங்கியுள்ளது என்பதை வருமான வரி இணையதளத்தில் பார்க்க வேண்டும்.

1. www.incometax.gov.in தளத்திற்குச் சென்று உள்நுழையவும் (Login).

2. e-File > Income Tax Returns > View Filed Returns என்ற பகுதிக்குச் செல்லவும்.

3. அங்கு உங்கள் ஸ்டேட்டஸை பார்க்கவும்:

o Processed with Refund Due என இருந்தால், ரீஃபண்ட் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, விரைவில் பணம் வரும்.

o Refund Failed என்றால், பணம் அனுப்ப முயற்சித்தும் தோல்வி அடைந்துள்ளது. வங்கி கணக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

o Refund Paid என்று காட்டினால், வருமான வரித் துறை பணத்தை அனுப்பிவிட்டது என்று அர்த்தம். ஆனால் உங்களுக்கு வரவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

35
2. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

உங்கள் 'ஸ்டேட்டஸ்' என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ப கீழ்க்கண்டவர்களை அணுகலாம்:

பொதுவான தாமதங்களுக்கு (CPC பெங்களூரு):

ரீஃபண்ட் ஆர்டர் வந்தும் பணம் வராதவர்கள் அல்லது நீண்ட நாட்களாக 'Processing' என்று இருப்பவர்கள் இந்த எண்களை அழைக்கலாம்:

• இலவச எண்கள்: 1800 103 0025 / 1800 419 0025

• நேரடி எண்கள்: +91-80-4612 2000 / +91-80-6146 4700 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை).

'Refund Paid' என்று வந்தும் பணம் வராதபோது (SBI):

ரீஃபண்ட் பணத்தை வங்கிகளுக்குப் பகிரும் அதிகாரப்பூர்வ வங்கி எஸ்பிஐ (SBI) ஆகும். இதில் சிக்கல் இருந்தால் இவர்களை அணுகவும்:

• SBI ரீஃபண்ட் உதவி எண்: 1800 425 9760

• மின்னஞ்சல்: itro@sbi.co.in (உங்களின் PAN மற்றும் மதிப்பீட்டு ஆண்டைக் குறிப்பிடவும்).

நோட்டீஸ் அல்லது வரி நிலுவை காரணமாக உங்கள் ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், உங்கள் பகுதி வரி அதிகாரியை (Jurisdictional Assessing Officer) அணுக வேண்டும். இணையதளத்தில் 'Know Your AO' என்ற பகுதியில் இவரின் விவரங்களைப் பெறலாம்.

45
3. ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?

போனில் தொடர்பு கொள்வதை விட அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிப்பதே சிறந்தது.

• போர்ட்டலில் உள்ள Grievances டேபிற்குச் செல்லவும்.

• Submit Grievance > CPC-ITR என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

• 'Refund not received' என்ற பிரிவைத் தேர்வு செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்யவும். இதற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்பது விதிமுறை.

55
4. உங்கள் தரப்பில் செய்ய வேண்டியவை

புகார் அளிக்கும் முன் இந்த இரண்டு விஷயங்களைச் சரிபார்க்க மறக்காதீர்கள்:

1. வங்கி கணக்கு சரிபார்ப்பு (Validation): உங்கள் வங்கி கணக்கு PAN எண்ணுடன் இணைக்கப்பட்டு 'Pre-validated' என்று இருக்க வேண்டும்.

2. பழைய வரி நிலுவை: உங்களுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏதேனும் வரி நிலுவை இருந்தால், அந்தப் பணத்தைக் கழித்துக்கொண்டுதான் மீதமுள்ள ரீஃபண்ட் தொகையை அரசு அனுப்பும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories