பழைய வரி முறையில் அடிப்படை விலக்கு மற்றும் 80C வரம்பை உயர்த்த வேண்டும் என வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர். புதிய வரி முறையில் சில விலக்குகளை சேர்ப்பதும் நடுத்தர வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
கடந்த பட்ஜெட்டில் புதிய வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு அரசு பெரிய அளவில் நிவாரணம் வழங்கியது. குறிப்பாக ரூ.12 லட்சம் வருமானம் வரை வரிவிலக்கு போன்ற அறிவிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அதே நேரத்தில், இந்த பழைய வரி முறையை தொடரும் வரி செலுத்துவோர் நமக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். காரணம், பழைய முறையில் இருப்பவர்கள் பலரும் சேமிப்பு திட்டங்களை அடிப்படையாக வைத்து வரி கணக்கிடுகிறார்கள்.
24
பழைய வரி முறை சலுகை
பழைய வரி முறையில் உள்ளவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு, தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ள அடிப்படை வரிவிலக்கு வரம்பை உயர்த்த வேண்டும். மேலும் 80C கீழ் உள்ள ரூ.1.5 லட்சம் சேமிப்பு வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது. பிஎஃப், காப்பீடு, வீட்டுக் கடன் போன்ற சேமிப்பு வழிகளை நம்பியிருக்கும் மக்களுக்கு இது நேரடியாக பயன் அளிக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.
34
80C வரம்பு உயர்வு
இதனுடன், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வீட்டுவசதி செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் நடுத்தர மக்களுக்கு பெரிய அழுத்தமாக மாறி வருகிறது. தற்போது வீட்டுக் கடன் தள்ளுபடி ரூ.2 லட்சம் என்ற வரம்பு சொத்து விலை உயர்வுக்கு ஏற்ப போதாது என பலர் நினைக்கின்றனர். எனவே இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
மேலும் புதிய வரியை தொடர விரும்புவோரிடமும் ஒரு கோரிக்கை உள்ளது. அதாவது புதிய முறையில் இருந்தாலும் சுகாதார காப்பீடு மற்றும் வீட்டுக் கடன் போன்ற முக்கிய செலவுகளுக்கு வரி விலக்குகள் சேர்க்கப்பட வேண்டும். இப்படியான மாற்றங்கள் வந்தால், மக்கள் மருத்துவம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக அதிக அழுத்தமில்லாமல் சேமித்து முதலீடு செய்ய முடியும் என்பதே நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.