2026-27 மத்திய பட்ஜெட், தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் கீழ் கடைசி பட்ஜெட்டாக இருக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி முறையில் பெரிய மாற்றங்கள், வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27 மத்திய பட்ஜெட் மீது நாட்டின் கவனம் குவிந்துள்ளது. ஏனெனில், பட்ஜெட் என்பது அரசின் வருவாய்-செலவுகள் மட்டுமல்ல, பொதுமக்களின் சம்பளம், சேமிப்பு, வாழ்க்கைத் தரம் என அனைத்தையும் மறைமுகமாக பாதிக்கும் முக்கிய ஆவணம். இதனால் தான் வருடந்தோறும் நிதியமைச்சரின் உரையை பணியாளர்கள், நடுத்தர குடும்பங்கள், வணிகர்கள் என பலரும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டை சிறப்பு செய்யும் மற்றொரு காரணம் உள்ளது.
23
மத்திய பட்ஜெட் 2026
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் கீழ் இது கடைசி பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த நிதியாண்டிலிருந்து புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வர அரசு தயாராகி வருகிறது. பல ஆண்டுகளாக இருந்த விதிகளை மாற்றி, எளிமைப்படுத்தி, நடைமுறையை சுலபமாக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் வரி முறையில் பெரிய அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 2026 வேலைவாய்ப்பு பட்ஜெட்டில் அதிகமாக பேசப்படும் விஷயம் தான்.
33
திறன் மேம்பாடு திட்டம்
குறிப்பாக இளைஞர்களுக்கான புதிய வேலை உருவாக்கம், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தனியார் முதலீடு ஊக்குவிப்பு போன்ற அறிவிப்புகள் வருமென நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். வேலை வாய்ப்பு அதிகரித்தால் குடும்ப வருமானம் உயரும். அதுவே செலவழிக்கும் திறனையும் உயர்த்தும். மேலும், MSME கடன் திட்டங்கள் மீது அரசின் கவனம் திரும்பினால் சுயதொழில் வாய்ப்புகளும் வளர வாய்ப்பு உள்ளது. புதிய சட்டம் வர உள்ள சூழலில் இந்த பட்ஜெட் மாற்றத்துக்கு முன் வரும் கடைசி வாய்ப்பு என்ற எண்ணம் உருவாகி, மக்கள் இன்னும் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.