டி-மார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கச் செய்யும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் தளங்கள் அதிகரித்துள்ளன. அவை என்னென்ன, அவற்றின் சலுகைகள் பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ரீடெயில் துறையில் டி-மார்ட் (D-Mart) மிகப்பெரிய பெயராக இருந்தாலும், தற்போது அதை விட குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கச் செய்யும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் வளங்கள் அதிகரித்துள்ளன. குறைந்த விலைகள், சலுகைகள், பண்டிகை கால சலுகைகள், அதுவும் வீட்டிலிருந்தபடியே வேகமான டெலிவரி என பல காரணங்களால் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங்கில் ஈர்க்கப்படுகின்றனர். சரியான கடைகளில் சரியான நேரத்தில் வாங்கினால், டி-மார்ட் விட கூடுதல் சேமிப்பு கிடைக்கிறது.
24
ஜியோமார்ட் ஆஃபர்
ஜியோமார்ட் (Jiomart), ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார் (Reliance Smart Bazaar) மற்றும் பிக்பேஸ்கெட் (BigBasket) போன்றவை தமிழ்நாட்டில் D-Mart-க்கு பெரிய போட்டியாளர்களாக உள்ளன. ஜியோமார்ட் சில பொருட்களில் MRP-யிலிருந்து நேரடியாக 40% வரை தள்ளுபடி வழங்குகிறது. குறிப்பாக பருப்பு, எண்ணெய், டூத் பிரஷ், சாஸ் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜாரிலும் காய்கறி, மளிகை பொருட்கள், பிஸ்கட், பேக்கேஜ் பொருட்கள் ஆகியவற்றில் பெருமளவு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
34
தள்ளுபடியில் மளிகை பொருட்கள்
BigBasket-ல் ஆர்கானிக் பொருட்கள், தினைகள், பிரீமியம் தரமான தானியங்கள் போன்றவை நல்ல தரத்தில் சரியான விலையில் கிடைக்கின்றன. பெரும்பாலும் 10-12% வரை நிரந்தர தள்ளுபடிகள் இருக்கும். Blinkit, Zepto, Swiggy Instamart போன்ற விரைவான வர்த்தக சேவைகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் 10-20 நிமிடங்களில் விரைவு டெலிவரி வழங்கப்படுகிறது. இந்த ஆப்ஸில் தினசரி மளிகை, சிற்றுண்டி, தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் சில நேரங்களில் D-Mart விலைகளுக்கு சமமாகவோ, குறைவாகவோ கிடைக்கலாம். குறிப்பாக உடனடி தேவைப்படும் போது இவை சிறந்த விருப்பங்கள் ஆகும்.
ஆஃப்லைனில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயின்ட், பழமுதிர் நிலையம், சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட், விஷால் மெகா மார்ட், மற்றும் நீலகிரிஸ் போன்ற கடைகள், டி-மார்ட் போலவே குறைந்த விலையில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்குகிறது. குறிப்பாக Vishal Mega Mart-ல் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சில நேரங்களில் D-Mart விலையைவிடவும் குறைவாக கிடைக்கும். Pazhamudhir Nilayam-ல் காய்கறி, பழங்கள் அதிகமாக சலுகை விலையில் கிடைக்கும். எனவே தமிழ்நாட்டில் D-Mart மட்டும், பல ஆன்லைன்-ஆஃப்லைன் கடைகளிலும் தரம் குறையாமல் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அதிக பணம் சேமிக்கலாம்.