வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய் கிழமை காலையிலேயே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து இல்லத்தரசிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் சந்தோஷத்துடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 2 லட்டுக்கள்தான்.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ரூ.11400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூபாய் குறைந்து 91,200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை 1 கிராம் 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 3 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.